"பட்டுன்னு பத்தே நிமிசத்துல பன் தோசா" செய்யலாம் வாங்க !

பட்டுன்னு பத்தே நிமிசத்துல பன் தோசா செய்யலாம் வாங்க !

பன் தோசா

இட்லி மாவு தீந்து போச்சா ! கவலைய விடுங்க .இட்லி மாவே இல்லாமல் ஒரு புதுசா ஒரு இட்லிய எப்டி செய்றதுன்னு இந்த பதிவில் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்

ரவை -1கப்

கடலை மாவு -1/2கப்

தயிர் -3 டீஸ்பூன்

தேவையான அளவு -உப்பு

கடலை எண்ணெய் -100 ml

சீரகம் -1/4 டீஸ்பூன்

கடுகு -1/4 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் -1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி -சிறிதளவு

காய்கறிகள் -150 கிராம்

(கேரட்,மு.கோஸ் ,பீன்ஸ் )

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ரவை ,கடலை மாவு ,தயிர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு தேவையான அளவுதண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி 20 நிமிடம் மூடி வைத்துக் கொள்ளவும்.

பின் அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம்,கடுகு, சேர்த்து பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ,சிறு துண்டுகளாக வெட்டி வைத்த காய்கறிகளை போட்டு இதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்கு பொன் நிறமாக வரும் வரை வதக்கவும்.

கலந்து வைத்த மாவுடன் இதனை சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும். குழிப்பணியார சட்டி அல்லது தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கலந்து வைத்த மாவை ஊற்றி பணியாரமாக சுட்டு எடுத்தால் சூடான சுவையான பன் தோசா ரெடி.

இதனுடன் தேங்காய் சட்டினி அல்லது கர சட்டினி சேர்த்து தொட்டு சாப்பிட்டால் அல்டிமேட்டாக இருக்கும் .

காலை சிற்றுண்டி மற்றும் இரவு நேர உணவாக செய்து சாப்பிட பொருத்தமானதாக இருக்கும் .

Tags

Next Story