பருப்பு பொடி செய்வது எப்படி ?

குழந்தைகள் ,பேச்சுலர்ஸ் ,சமைக்க தெரியாத புதுமண தம்பதி மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் ரொம்ப உதவிய இந்த பருப்பு பொடி இருக்கும். சூடான சாதத்தத்தில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பருப்பு பொடி கலந்து சாப்பிட அருமையான டிஷ்சை இந்த பதிவில் பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்:

துவரம்பருப்பு – 100 கிராம்

பாசிப்பருப்பு – 100 கிராம்

உடைத்த கடலை – 100 கிராம்

பூண்டு – 100 கிராம்

சீரகம் – 1.1/2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 10

குண்டு மிளகாய் – 10

கறிவேப்பிலை – 3 கொத்து

பெருங்காயம் – 30 கிராம்

வெல்லம் – 25 கிராம்

உப்பு தேவையான அளவு

செய்முறை :

முதலில் கடாயை எடுத்து அதில் முதலில் நாம் எடுத்து வைத்த துவரம் பருப்பை போட்டு வறுக்கவும். அந்த பருப்பை கருகாமல் வறுத்தெடுத்து கொள்ளவும் . பின் அதே அடுப்பில் பாசிப்பருப்பை கருகவிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே கடாயில் உடைத்த கடலை சேர்த்து அதனையும் வறுத்து 3 பருப்புகளை ஒன்றாக வைத்துக்கொள்ள வேண்டும். அதே கடாயில் பூண்டு சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும். ஓரளவு வறுத்து அதையும் பருப்புகளுடன் சேர்த்து வைக்கவும். பருப்பு பொடிக்கு முக்கியமாக ஒன்று இப்போது சேர்க்கப்படும் பொருள் தான். அது காய்ந்த மிளகாய் 10, குண்டு மிளகாய் 10 சேர்த்து மீடியம் தீயில் வைத்து கருக்கவிடாமல் வறுத்துக்கொள்ளவும். அதன் பின் உருவி வைத்த கறிவேப்பிலையை எடுத்து வறுத்து அதையும் வறுத்த பொருட்களுடன் வைத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றிகொள்ளளவும். அதில் பெருங்காயம் சேர்த்து வறுக்கவும். இதை மட்டும் எண்ணெய்யில் வறுத்தால் வாசனை மணமணக்கும் .இப்போது வறுத்த பொருட்களுடன் கல் உப்பு, கொஞ்சம் வெல்லம் சேர்த்து மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு அதில் 4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அந்த நெயில் 1 டீஸ்பூன், கடுகு சேர்த்து பொரிந்தவுடன் அதோடு 4 மிளகாய், கடைசியாக 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து ஒரு முறை கலந்துவிடவும். அதன் பின் அதில் அரைத்து வைத்த பருப்பு பொடியை போட்டு அதனுடன் வடித்து வைத்த சாதத்தை சேர்த்து கலந்து பரிமாறலாம் .

Tags

Next Story