ராகி-யின் ரகசிய ஸ்பெஷல்..

ராகி-யின் ரகசிய ஸ்பெஷல்..

ராகி

ராகி என்றாலே நமக்கு ஆடி மாத கூழ் தாங்க நியாபகம் வரும் . "வேப்பிலைக்கு மிஞ்சுன மருந்தும் இல்ல கூழுக்கு மிஞ்சுன விருந்துமில்ல " என்ற வசனமும் சேர்ந்தே நியாபகம் வருது இல்லையா..? ஆமாங்க அது உண்மை தான் .ராகி நம் முன்னோர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவியாக இருந்தது மட்டுமல்லாமல் ஸ்நாக்ஸ் வும் இருந்துருக்குங்க. என்னங்க நம்ப முடியலையா..?அட ஆமாங்க..!

தோசை , அடை, ரொட்டி ,இடியாப்பம்,பக்கோடா ,சேமியா,புட்டு மற்றும் போண்டா என பல வகையான ரெசிப்பீஸ் செய்து தினசரி உணவில் ராகியை சேர்த்து நீரழிவு நோயைக்கட்டுப்படுத்தினார்கள் . அது மட்டுமல்லாமல் எடை இழப்பு, இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைப் பராமரிக்க உதவுகிறது.இன்று ராகி போண்டா எப்படி செய்யலாம் பாக்கலாம் வாங்க ..

தேவையான பொருட்கள் :

சமையல் எண்ணெய்-1/2 லி

ராகி மாவு - 1கப்

அரிசிமாவு -1/4 கப்

சோளம் மாவு -1 ஸ்பூன்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் -5

கருவேப்பில்லை ,கொத்து மல்லி -1 கைப்பிடி அளவு

உப்பு -தேவையான அளவு

பேக்கிங் சோடா -சிறிதளவு

சீரகம் -சிறிதளவு

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு,அரிசிமாவு,சோளம் மாவு,பேக்கிங் சோடா,சீரகம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .

சிறு சிறு துண்டுகளாய் நறுக்கிய பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாய்,கருவேப்பில்லை ,கொத்து மல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும் .பின் தேவையான தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும் .

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் மாவை சிறு சிறு துண்டுகளாக உருட்டி எண்ணெயில் போட்டு நன்கு சிவக்க பொறித்தெடுத்தால் சூடான ,சுவையான க்ரிஸ்பியான போண்டா ரெடி .

Tags

Next Story