ஆரோக்கியமான கேழ்வரகு இடியாப்பம் !!

ஆரோக்கியமான கேழ்வரகு இடியாப்பம் !!

கேழ்வரகில் கால்சியம் சக்தி அதிகம் உள்ளது. வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வருவது, பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும். கேழ்வரகில் இருக்கும் “ட்ரிப்டோபான்” எனப்படும் பொருள் பசி அதிகம் ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவில் தினமும் ஒரு முறை இதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - ஒரு கப்

தண்ணீர் - ஒரு கப்

சர்க்கரை - 2டீஸ்பூன்

நாட்டு சர்க்கரை - 4 டீஸ்பூன்

உப்புத் தூள் - கால் டீஸ்பூன்

தேங்காய் - அரை மூடி


செய்முறை :

இடியாப்பம் செய்வதற்கு கேழ்வரகு மாவை சூடான வாணலியில் இரண்டு நிமிடங்கள் வறுத்து கொள்ளவும் . தண்ணீரை உப்புத் தூள் போட்டு கொதிக்க வைத்துக் கொள்ளவும். இந்த கொதித்த தண்ணீரை வறுத்த மாவில் சிறிது சிறிதாக சேர்த்து பிழியும் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும். இந்த மாவை இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லி தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும். பத்து நிமிடங்கள் வெந்த பிறகு இதை உதிர்த்து தேங்காய்த் துருவல் சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். குருமா சேர்த்தும் சாப்பிடலாம்.

Tags

Next Story