ரெஸ்டாரண்ட் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் !!

ரெஸ்டாரண்ட் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் !!

மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்

ஃப்ரைட் ரைஸ்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இந்த ஃப்ரைட் ரைஸ்கள் திகழ்கின்றன. ஃப்ரைட் ரைஸ்களில் பல வகை உண்டு. அதில் குறிப்பாக சிக்கன் ஃப்ரைட் ரைஸ், ப்ரான் ஃப்ரைட் ரைஸ், எக் ஃப்ரைட் ரைஸ், வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ், பன்னீர் ஃப்ரைட் ரைஸ், மற்றும் மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ்.

அதாவது, காய்கறிகள், பழங்களைவிட காளானில் நிறைய புரோட்டீன்கள் உள்ளது. காளான்கள்: பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருப்பதே இந்த காளான்கள்தான். முக்கியமாக, இதயத்திற்கு நன்மை தரக்கூடியது இந்த காளான்கள். இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால், இதய நோய் அபாயத்தை வெகுவாக குறைக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1 கப்

மஷ்ரூம் - 500 கிராம்

பெரிய வெங்காயம் - 1

குடை மிளகாய் - 1

பச்சை மிளகாய் - 2

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 மேஜைக்கரண்டி

வினிகர் - 2 மேஜைக்கரண்டி

சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி

ஷஷான் பேஸ்ட் - 2 மேஜைக்கரண்டி

மிளகு தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

ஸ்பிரிங் ஆனியன் - சிறிதளவு

செய்முறை :

முதலில் ஒரு கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் வரை அதை ஊற வைக்கவும்.

அடுத்து வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், மஷ்ரூம், பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியன்னை நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

பின்பு அரை மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை நன்கு வடிகட்டி வைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைக்கவும்.

பின்னர் தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்க்கவும்.

பின்பு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் நாம் ஊற வைத்து வடிகட்டி வைத்திருக்கும் பாசுமதி அரிசியை போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும். (சாதம் முக்கால் பாகம் வெந்தால் போதும்.)

20 நிமிடத்திற்கு பிறகு சாதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விடவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)

இப்பொழுது ஒரு pan ஐ மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாயை மற்றும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.

பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

அடுத்து அதில் சோயா சாஸ், வினிகர், மற்றும் ஷஷான் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை வேக விடவும்.

6 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக சாதம் நன்கு மஷ்ரூமோடு சேருமாறு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியன்னை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் தயார்.

Tags

Next Story