ரேஸ்டரண்ட் ஸ்டைல் பிஷ் பிங்கர் வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!!

ரேஸ்டரண்ட் ஸ்டைல் பிஷ் பிங்கர் வீட்டிலேயே செய்யலாம் வாங்க..!!

பிஷ் பிங்கர் 

நாம் குழந்தைகள் கோடைவிடுமுறையில் வீட்டில் இருப்பார்கள் . அப்போது அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளை செய்துகொடுக்கணும்னு நினைப்பிங்க , அப்போ இந்த ரெசிப்பியை செஞ்சி கொடுங்க... இப்போ மீன் பிடிக்காத குழந்தைகளுக்கு இந்த மாதிரி செஞ்சி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க... மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.. புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.. சிலவகை மீன்களில் அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால், இதனை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.இப்போ வாங்க எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்...

தேவையான பொருட்கள் :

முள்ளு இல்லாத மீன் - 200கி

வெங்காயம் - 100கி

உருளை கிழங்கு - 2

முட்டை - 1

இஞ்சி பூண்டு விழுது -1டீ ஸ்பூன்

பிரட் தூள் - 100கி

மஞ்சள் தூள் - 1/4டீ ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள் - 1டீ ஸ்பூன்

கருவேப்பிலை - 12-15

நறுக்கிய மல்லி தழை - 2டீ ஸ்பூன்

எண்ணெய் - 200மிலி

செய்முறை :

* முள்ளு இல்லாத மீன் எடுத்துக்கோங்க.அத வேக வச்சி உதிர்த்து வைத்து கொள்ளவும்.உருளை கிழங்கையும் வேக வைத்து கொள்ளவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் சூடு செய்யவும். அதில் இஞ்சி பூண்டு விழுது,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* கொத்தமல்லி தழை,கருவேப்பிலை சேர்த்து வதக்கி கூடவே மஞ்சள் தூள்,கரம் மசாலா தூள்,மிளகு தூள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

* நம்ம வேக வைத்த மீன் மற்றும் உருளை கிழக்கு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

* இப்போம் அதை குட்டி குட்டி பிங்கர் மாதிரி பிடித்து கொள்ளவும்.

* ஒரு முட்டையை நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.

* ஒரு ஒரு பிஷ் பிங்கரை முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி ஒரு 10 நிமிடம் வைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊத்தி எண்ணெய் காய்ந்ததும் பிஷ் பிங்கர் போட்டு பொரித்து எடுக்கவும்.

* மிகவும் சுவையான பிஷ் பிங்கர் தயார். கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.

Tags

Read MoreRead Less
Next Story