சாமை பிஸிபேளாபாத் !!

சாமை பிஸிபேளாபாத் !!

சாமை பிஸிபேளாபாத்

தேவையான பொருட்கள்:

சாமை அரிசி - 3/4 கப்

துவரம் பருப்பு -1/4 கப்

நறுக்கிய காய்கறிகள் - 3/4 கப்

கெட்டி புளிகரைசல் - 1/4 கப்

நெய் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயம் -1

பொடியாக நறுக்கிய தக்காளி -1 (சிறியது)

பொடியாக நறுக்கிய கொத்துமல்லிதழை - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை -1 கொத்து

வறுத்து பொடிக்க

தனியா -2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் -1

கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

மிளகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்

பட்டை - 1 சிறு துண்டு

ஏலக்காய், கிராம்பு -தலா 2

அன்னாச்சிப்பூ -1

கொப்பரைத்துறுவல் -11/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

சாமை அரிசி, துவரம்பருப்பு சேர்த்து கழுவி 1 கப் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசி பருப்பை அதே நீரோடு குக்கரில் 3 விசில் வரை வேக வைக்கவும். வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாகவோ அல்லது விழுதாகவோ அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்கள் என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். பாதியளவு காய் வெந்ததும் புளிக்கரைசல், உப்பு, பொடித்த பொடி சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும். இவற்றை வேக வைத்த அரிசி பருப்போடு சேர்த்து மேலும் 1 கப் தண்ணீர் சேர்த்து 1 விசில் வரை வேகவிடவும். ப்ரெஷ்ஷர் அடங்கியதும் தாளித்து சேர்த்து, கொத்துமல்லித் தழை, நெய் சேர்த்து கிளறி சிப்ஸ் அல்லது வறுவலோடு சேர்த்து பரிமாறவும்.

Tags

Next Story