சாமை வெஜிடபின் பொங்கல்..!

சாமை வெஜிடபின் பொங்கல்..!

சாமை வெஜிடபின் பொங்கல்

சாமை வெஜிடபிள் பொங்கல்

தேவையான பொருட்கள்:

சாமை - 1/2

கேரட், உருளைக்கிழங்கு, நூல்கோல் - தலா 100 கிராம்

முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி - தலா 100 கிராம்

பச்சை மிளகாய் - 4

தக்காளி - 2

இஞ்சி - சிறிதளவு

நெய் - 50கிராம்

எலுமிச்சை பழம் - 1

கொத்துமல்லித்தழை-சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சாமையை 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து குழைய வேகவிடவும். பிரஷரில் வைக்க வேண்டுமென்று அவசியமில்லை.

காய்கள், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி நெய் சேர்த்து வதக்கவும். (விரும்பினால் பெரிய வெங்காயம் கொஞ்சம் சேர்க்கலாம்).

வதங்கிய பின் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொஞ்சமாக உப்பு போட்டு அடிக்கடி கிளறிவெந்ததும், நீர் வற்றியதும் இவற்றை சாமை பொங்கலுடன் நெய் சேர்த்து கிளறவும்.

நன்கு ஒன்று சேர்ந்ததும் எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.

Tags

Next Story