இறால் தக்காளி தொக்கு... செய்வது எப்படி ?

இறால் தக்காளி தொக்கு... செய்வது எப்படி ?

இறால் தக்காளி தொக்கு

பூண்டு தொக்கு ,கருவாடு தொக்கு ,தக்காளி தொக்கு மாதிரி இது இறால் தக்காளி தொக்கு .

இறால் பிரியாணி செஞ்சு பார்த்திருப்போம்.ஆனால் இறால் தக்காளி தொக்கு கேள்விபட்டுள்ளீர்களா?

இது மாதிரி புதுசா, தினுசா, ரொம்ப அட்டகாசமான டிஷ்சை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம் .

வாங்க பதிவுக்கு போகலாம் .

தேவையான பொருட்கள்:

எண்ணெய்-150ml

கடுகு -தேவையான .அளவு

இறால் -400 கிராம்

தக்காளி -300 கிராம்

பெ.வெங்காயம்-2

இஞ்சி பூண்டு விழுது-2ஸ்பூன்

மிளகாய் தூள்-1ஸ்பூன்

ப.மிளகாய்-2

உப்பு-தேவையான அளவு

கறிவேப்பிலை-2 கொத்து

செய்முறை:

இறாலை நன்கு சுத்தம் செய்து மிளகாய் தூள்.இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.

வெங்காயம்,தக்காளியை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, நன்கு காய்ந்ததும்,கடுகு ,கருவேப்பிலை பொரிந்ததும் ,அரைத்த வெங்காய தக்காளி விழுது சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் கீறி வைத்த பச்சைமிளகாய்களை சேர்த்து கிளறி விடவும் .பின் ஊற வைத்த இறாலை சேர்த்து கிளறவும்.

எண்ணெய் பிரிந்து இறால் சுருண்டு வரும் போது கறிவேப்பிலை தூவி இறக்கவும். இப்போது இறால் தக்காளி தொக்கு தயார்.

Tags

Next Story