இலங்கை சைட் டிஷ் சீனி சம்பல் !!

இலங்கை சைட் டிஷ் சீனி சம்பல் !!

சீனி சம்பல்

இலங்கையில் பிரபலமான இந்த சீனி சம்பலை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சீனி சம்பல் பிரட்- டில் ஜாமிற்கு பதிலாக ஸ்டஃப்பிங் செய்து சாப்பிடுகின்றனர். மீன் பயன்படுத்தி கூட சம்பல் செய்வார்கள். சீனி சம்பலை சாதத்துடன் பிரட்டி சாப்பிடுவார்கள். பேச்சுலர்கள் இதை ஒரு முறை செய்து வைத்தால் ஒரு மாதத்திற்கு பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். பேச்சுலர்களுக்கு ஈசியான ரெசிபியும் கூட....வாங்க செய்முறை பார்ப்போம்.

தேவையான பொருட்கள் ;

வெங்காயம்

கடலெண்ணெய்

ஏலக்காய்

அன்னபூர்ணா இலை

சர்க்கரை

மிளகாய் தூள்

புளி

உப்பு

கறிவேப்பிலை

செய்முறை ;

கனமான பாத்திரத்தை சூடுபடுத்தி அதில் எண்ணெய் ஏதும் ஊற்றாமல் 400 கிராம் பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.

4 நிமிடங்களிலேயெ தண்ணீர் விட ஆரம்பித்து 7 நிமிடங்களில் வெங்காயம் நன்கு வதங்கி விடும்.

வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதை அப்படியே ஓரமாக வைக்கவும்.

கடாயில் எட்டு ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு இரண்டு துண்டு பட்டையை உடைத்து வறுக்கவும். அடுத்ததாக பத்து ஏலக்காய், 5-6 அன்னபூர்ணா இலை போடுங்கள்.

கறிவேப்பிலை பயன்படுத்துவதாக இருந்தால் கொஞ்சம் அதிகமாக போடுங்கள்.

இதனிடையே 75 கிராம் புளியை 100 மில்லி லிட்டர் தண்ணீரில் கரைத்து அந்த புளி தண்ணீரை கடாயில் ஊற்றுங்கள்.

அடுத்ததாக சீனி சம்பலுக்கு தேவையான அளவு உப்பு, 50 கிராம் சர்க்கரை சேர்க்கவும்.

சர்க்கரை உருகியவுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் போட்டு புளி தண்ணீர், மசாலா பொருட்களின் பச்சை வாடை போகும்படி இரண்டு நிமிடங்களுக்கு மிக்ஸ் செய்யவும்.

இப்போது எண்ணெய் இன்றி வதக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்துவிடவும். ஐந்து நிமிடங்களில் இது ஜாம் பதத்திற்கு வந்துவிடும்.

அவ்வளவு தான் சீனி சம்பல் தயார்.

Tags

Next Story