சமைக்கும்போது ஃபாலோ பண்ண சூப்பர் டிப்ஸ் !
டிப்ஸ்
- அப்பளத்தின் இருபுறமும் லேசாகக் கொஞ்சம் எண்ணெய் தடவி அப்பளத்தைத் தணலில் சுடவும். அப்பளம் எண்ணெயில் பொரித்தது போலவும், அதிகச் சுவையோடும் இருக்கும்.
- உருளைக்கிழங்கு சீவியதும் சிறிதளவு பயத்தம் மாவைத் தூவி விட்டு சிப்ஸ் செய்தால் மொரமொரப்பாக இருக்கும்.
- உருளைக்கிழங்கைச் சீவி ஒரு வெள்ளைத் துணியில் கட்டிக் கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் அமிழ்த்து வைத்து எடுத்த பிறகு குளிர்ந்த உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்து வறுத்தால் வெள்ளை வெளேரென்று கரகரப்பாக இருக்கும்.
- பக்கோடா மொர மொரப்பாக இருக்க மாவைக் கலக்கும் போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால் போதும்.
- உளுந்த வடைக்கு மாவை நைசாக அரைத்து, வேக வைத்து உருளைக் கிழங்கையும் சேர்த்துப் பிசைந்து வடை தட்டினால் புஷ்... புஷ்.. என்று வடை வெகு ஜோராக இருக்கும்.
- ரவா லட்டு செய்யும் போது கையில் நெய்யைத் தடவிக் கொண்டு உருண்டை பிடியுங்கள் உருண்டையும் சுலபமாக வரும் வாசனையாகவும் இருக்கும்.
Next Story