உங்க வீட்டு பிரிட்ஜ்- அ பராமரிக்க சூப்பர் டிப்ஸ் !
பிரிட்ஜ்
1. பிரிட்ஜை அடுப்பு அறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது. திறந்தால் உடனே மூடி விட வேண்டும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந் துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
4. பிரிட்ஜை துடைக்கும் போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும் போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு வீடுமுறை கொடுக்கவும்.
6. 1/4" அளவில் ஐஸ் உருவாகி விட்டால் டீஃப்ராஸ்ட் செய்து விட மின்சாரம் மிச்சமாகும்.
7. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
8.பிரிட்ஜ் ஓசை எழுப்பினால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்கவும்.
9. பிரிட்ஜில் வைக்கும் பொருள்களின் மீது நீர்த்துளிகள் கண்டிப்பாகப் படிந்து இருக்கக் கூடாது. நன்கு துடைத்து வைக்க வேண்டும்.
10. அதிகப்படியாகப் பொருள்களை அடைத்து வைக்கக் கூடாது. பெட்டிக்குள் வைக்கப் படும் ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்பச் சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
11.பிரிட்ஜை இதமாகத் திறந்து மூட வேண்டும்.
12. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புக் (Earth) கொடுக்க வேண்டும்.