இனிப்பான பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெசிபி!

இனிப்பான பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெசிபி!

பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெசிபி

தேவையானவை:

சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்,

பழுப்பு சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,

பால் - ஒரு கப்,

வெண்ணெய் - அரை டீஸ்பூன்,

வெனிலா எசன்ஸ் - அரை டேபிள் ஸ்பூன்,

உப்பு - ஒரு சிட்டிகை.

.செய்முறை:

ஒரு கிண்ணத்தில் சோள மாவு பாதி பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு கடாயில் மீதியுள்ள பால், பழுப்பு சர்க்கரை, வெண்ணெய், உப்பு மற்றும் வெனிலா எசன்ஸை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

அதில் சோள மாவு, பால் கலவையை சேர்த்து கொள்ளவும்.

கலவை நன்கு கெட்டியாகி, பளபளப்பாக வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து, கலவையை ஆறவிட்டு, வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் ஒரு மணி வைத்து எடுத்தால் சுவையான பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெடி.

Tags

Next Story