சர்க்கரை வள்ளி கிழங்கில் இனிப்பு இடியாப்பம்..

சர்க்கரை வள்ளி கிழங்கில் இனிப்பு  இடியாப்பம்..

இனிப்பு இடியாப்பம்

பொதுவா சர்க்கரை வள்ளி கிழங்கு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் .சீசன் வந்தால் இந்த கிழங்கை சாப்பிடாமல் இருக்க மாட்டோம். ஒரு சில நேரங்களில் விலை மலிவாக கிடைக்கும் நேரத்தில் ஒரே மாதிரி வேக வைத்து சாப்பிட சலித்து விடும் .அப்போது இது போல செய்து பாருங்கள்.வழக்கமான மாவில் இடியாப்பம் செய்வதை விட மாவுடன் கிழங்கை சேர்த்து செய்து சாப்பிட வேற லெவல் டேஸ்டாக இருக்கும் . சர்க்கரை வள்ளி கிழங்கில் இனிப்பு இடியாப்பம்..! எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் .

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு (அ ) இடியாப்ப மாவு -2 கப்

உப்பு- 1சிட்டிகை

சர்க்கரை வள்ளி கிழங்கு- 5

எண்ணெய் -50ml

செய்முறை ;

சர்க்கரவள்ளி கிழங்கை கழுவி சுத்தம் செய்து நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின் இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சுடு தண்ணீர் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.பின் வேக வைத்த சக்கரவள்ளி கிழங்கை பிசைந்து அல்லது மசித்து எடுத்துக் கொள்ளவும். அதையும் மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். பின் முறுக்கு குழாயில் உள்ள இடியாப்ப அச்சை எடுத்து குழாயை எண்ணெய் தடவிக் கொள்ளவும். பின் மாவை உருண்டைகளாக்கி குழாயை நிரப்பி கொள்ளவும். இடியாப்ப தட்டில் வாழை இலையை பரப்பி அதில் மாவை பிழிந்து விடவும். இப்போது இட்லி பானை அல்லது இடியாப்ப சட்டியில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான மணமான சர்க்கரை வள்ளி கிழங்கு இடியாப்பம் தயார்.

குறிப்பு: தேங்காய் பாலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.

Tags

Read MoreRead Less
Next Story