இனிப்பு மடக்கு ரெசிபி செய்யலாம் வாங்க !!

இனிப்பு மடக்கு ரெசிபி செய்யலாம் வாங்க !!

இனிப்பு மடக்கு

90ல் பிறந்த குழந்தைகளின் ஃபேவரிட் ஆன ஸ்வீட் இது மிகவும் எளிமையாக வீட்டில் செய்யக்கூடியது மிகவும் சுவையானது இக்கால குழந்தைகளுக்கும் கொடுப்பதற்கு உடம்புக்கு மிகவும் நல்லது வாங்க செய்முறையை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்

உப்பு - 1/4 டீஸ்பூன்

சர்க்கரை - 1 டீஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

சர்க்கரை - 1 கப்

லெமன் ஜூஸ் - 1/2 டீஸ்பூன்

செய்முறை :

ஒரு கிண்ணத்தில் மைதா,சர்க்கரை, உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். 20 நிமிடம் ஊற வைக்கவும்.சர்க்கரை பாகு செய்வதற்கு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு,லெமன் ஜுஸ் ஊற்றி இறக்கவும். பிசைந்து மாவை, சோள மாவு போட்டு மெல்லியதாக திரட்டு கொள்ளவும். பின் உருட்டி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வெட்டிய துண்டை லேசாக திரட்டி வைத்து கொள்ளவும்.பின் சூடான எண்ணெயில் பொரித்து,சர்க்கரை பாகில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும். ஸ்வீட் ஆன மடக்கு ரெடி.

Tags

Read MoreRead Less
Next Story