இது அந்த கால ஹெல்த் டிரிங், வீட்டிலேயே ஈசியா செய்யலாம் - பானகம்

இது அந்த கால ஹெல்த் டிரிங், வீட்டிலேயே ஈசியா செய்யலாம் - பானகம்

பானகம் 

மழைக்காலங்களில் வைரஸ் தொற்றிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ளத் தனித்திருப்பதும் ஆரோக்கிய உணவைச் சாப்பிடுவதும் அவசியம். பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் இந்த வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

போர்க்களங்களில் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட சத்தான பானமான பானகம் எப்படி செய்வது என பாப்போம்.

வெல்லம், பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றிக் கரைத்துக் கொள்ளுங்கள். 2 அல்லது 3 வெற்றிலை (காம்பை நீக்கிவிடுங்கள்), ஒரு கைப்பிடி துளசி இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு டீஸ்பூன் சுக்கு அல்லது இஞ்சியைத் துருவிக்கொள்ளுங்கள். வெற்றிலை விழுதையும் இஞ்சித் துருவலையும் வெல்லத் தண்ணீரில் கரைத்து, ஒரு சிட்டிகை ஏலப்பொடி சேர்த்துக் கலந்து வடிகட்டிப் பரிமாறலாம்.

Tags

Next Story