இந்த வார சமையலறை டிப்ஸ் !!

இந்த வார சமையலறை டிப்ஸ் !!

This week's kitchen tips

*மழை காலங்களில் உப்பில், ஈரக்கசிவு ஏற்படும். அப்படி ஆகாமலிருக்க சிறிது அாிசியை கலந்து வைக்கலாம்.

*வறுத்த ரவையில் தோசை சுட்டால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.

*மசாலா பொருட்கள் மணமாகவும், ருசியாகவும் இருப்பதால் அன்றாடம் சமையலில் பயன்படுத்தக் கூடாது. மசாலா பொருட்கள் ஜீரண நீர் சுரப்பை பாதிக்கும்.

*உணவு பொருட்களுக்கு மஞ்சள் பொடி நல்ல நிறம் கொடுப்பதுடன், ஆரோக்கியம் மற்றும் கிருமி நாசினியாகவும் உதவுகிறது.

*பலகாரங்கள் நமத்துப் போகாமலிருக்க பாத்திரங்களின் அடியில் உப்பு பொட்டலம் ஒன்றை போட்டு வைக்கலாம்.

*இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது மிக்ஸியில் அரைப்பதாக இருந்தால் அரிசியைக் கொதிநீரில் ஊறவைத்து அரைத்துப் பாருங்கள். மாவு சீக்கிரமாக அரைந்துவிடும்.

*வற்றல் மிளகாய், சீரகம், தனியா, பெருங்காயம், பொட்டுக் கடலை ஆகியவற்றை பச்சையாக மிக்ஸியில் பொடித்து, கொத்தவரை, காராமணிப் பொரியலுக்குப் போட்டு வதக்கினால் மிகவும் ருசியாக இருக்கும்.

*பகாய்கறிகளை வதக்கும்போது, எண்ணெயில் அரை தேக்கரண்டி| சாலட்டைப் போட்டுவிட்டு வதக்கிப் பாருங்கள். எண்ணெய் குறைவாக விட்டால் போதும். அடிப் பிடிக்காமல் சீக்கிரம் வதங்கும். உப்புடன் வதங்குவதால் காய் அருமையாக இருக்கும்.


*வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை வட்டமாக வெட்டிய பின், தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.

*பாகற்காயில் கொஞ்சம் தயிர் ஊற்றி ஊறவிட்டு சிறிது நேரம் கழித்து வதக்கினால், அதிக கசப்பு இருக்காது. பொரியலும் சுவையானதாக இருக்கும்.

*இட்லி மீதமாகிவிட்டால் நன்கு உதிா்த்து ஏலக்காய் பொடித்து 5 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு தேங்காய்த் துருவலும் சா்க்கரையும் சோ்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.

Tags

Next Story