உங்க வீட்டில் கீரை இருக்க அப்போ ஈவ்னிங் இந்த மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் ட்ரைப் பண்ணி பாருங்க ...

உங்க வீட்டில் கீரை இருக்க அப்போ ஈவ்னிங் இந்த மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் ட்ரைப் பண்ணி பாருங்க ...

கீரை பக்கோடா ரெசிபி

கீரை பக்கோடா ரெசிபி

தேவையான பொருட்கள்:

அரைக்கீரை/சிறுகீரை - 1 கைப்பிடி

உருளைக்கிழங்கு - 2

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள்- 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - சிறிது

கடலை மாவு - 5 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

எள்ளு - 1 டீஸ்பூன்

ஓமம் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை :

முதலில் கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அதேப் போல் உருளைக்கிழங்குகளை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, அதைத் துருவி நீரில் போட்டு தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் நறுக்கிய கீரை, துருவிய உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

பிறகு அதில் கடலை மாவு, அரிசி மாவு, எள்ளு, ஓமம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும். பொதுவாக நீர் சேர்க்க தேவையில்லை.

ஒருவேளை மிகவும் வறண்டு இருந்தால், லேசாக நீரைத் தெளித்து பிசைந்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது எடுத்து உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் ரெடி.

Tags

Next Story