இயற்கை குணங்கள் நிறைந்த உளுந்து பால் !!
உளுந்து பால்
உளுந்து பால் நரம்பு மண்டலம் வலிமை பெறும் புரதம் நிறைந்தது. உடலுக்கு குளிர்ச்சயை தரும் இடுப்பு வலியை போக்கும் மாதவிடாய் கோளாறு நீங்கும் குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்தும், நரம்பு மண்டலம் வலிமை பெறும் மலச்சிக்கல், வயிறு உப்புசம் தீரும்.
தேவையான பொருட்கள் :
உளுந்து
நாட்டு சர்க்கரை
பால் (அ)தேங்காய்பால்
செய்முறை :
உளுந்து 1/4 டம்ளர் எடுத்து கொள்ளவும். அதை கழுவி விட்டு குக்கரில் போட்டு11/2தண்ணீர் விட்டு 5 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும், பிறகு ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு கொஞ்சம் தண்ணீர் விட்டு நாட்டு சர்க்கரை போட்டு கொதிக்க விடவும். பிறகு 1 டம்ளர் பால் அல்லது தேங்காய்பால் விட்டு கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான உளுந்து பால் ரெடி.
Next Story