வரகு எலுமிச்சை சாதம்!
வரகு எலுமிச்சை சாதம்
வரகு எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம்பழம்
மஞ்சள் பொடி
நல்லெண்ணெய்
பொடிக்க:
வெந்தயம்
மிளகாய் வற்றல்
உப்பு
தாளிக்க:
கடுகு
உளுந்தம்பருப்பு
மிளகாய் வற்றல்
நிலக்கடலை
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை
வரகரிசி
முந்திரிப்பருப்பு
செய்முறை:
ஒரு கப் வரகரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்க வேண்டும். குக்கரில் இருந்து எடுத்த வரகு சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள், நல்லெண்ணெய் கலந்து ஆற வைக்கவும் வாணலியில் எண்ணெய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.
சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும். உப்பை வறுக்கவேண்டாம். மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும். கடைசியாக தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து எலுமிச்சம்பழம் பிழியவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைக்கவும்.