வொண்டர் உணவுகள் !
முளை தானியங்கள்
ஐந்து நபர்களுக்கு
பச்சைப்பயறு அல்லது பாசிப்பயறு (தோலுடன்) தேங்காய் அரைமூடி - 200 கிராம்
பேரீட்சை அல்லது வெல்லம் - 250 கிராம்
தயாரிப்பு முறை:
முளை தானியங்கள் உருவாக 8 மணி முதல் 24 மணி நேரம் வரை ஆகும். முளைதானியங்கள் முளைகிளம்பும் சமயம் விட்டமின் தொழிற்சாலையாகவும் புரதம் உற்பத்தியாகும் சாலையாகவும் உருவாகி நன்மை தருகிறது. பாசிப்பயறை 8மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். மூன்று முதல் எட்டு மடங்கு வரை பெரிதாகும். பின் தண்ணீரை வடித்துக் காற்றில் உலரவிடலாம். அல்லது ஈரத்துணியிலும் கட்டி வைக்கலாம். அடுத்த எட்டுமணி நேரத்திற்குள் வெள்ளை முளை அழகாகக் கிளப்பி வரும். பார்ப்பதற்கு பரவசமாய், ஆனந்தமாய் இருக்கும் புரதம் பல மடங்கு கூடும் அற்புத உணவு முளை தனியங்களை ஆங்கிலத்தில் Wonder Foods என்கின்றனர் அதிசய அற்புதமான உணவு. இவைகளைத் தினமும் நமது உணவில் சேர்த்தால் இந்திய உணவுத் தட்டுப்பாடு கணிசமாகக் குறையும் முளைத்து வந்த பயறுடன் தேங்காய் திருகல். வெல்லம் சேர்த்தால் சுவையான டிபன் சாப்பிட ரெடி.
முளைத்த தானியத்தை மட்டும் தனியாகவும் சாப்பிடலாம் பல் இல்லாத அன்பர்கள் முளை தானியங்களை மிக்ஸியில் நீர் சேர்த்து அரைத்து வடிகட்டி இயற்கை முளைதானியப் பால் எடுத்து அத்துடன், வெல்லம் அல்லது தேன் சேர்த்தும் சப்பிச் சப்பிப் பருகலாம் பாசிப்பயறு முளைப்பால், வேர்கடலை முளைப்பால். என தனித்தனியாகவும், கலந்தும் தயாரிக்கலாம்.
பயன்கள்:
இயற்கை உணவுகளில், அடுப்பில்லா உணவுகளில் அதிகப் புரதமும்,கார்போஹைடிரேட்டும் இணைந்த அற்புதமான உணவு பசிதாங்கும் உணவுகள் ஏழைகளுக்கும் ஏற்ற உணவுகள் நீரழிவு அன்பர்கள் இனிப்புச் சேர்க்காமல் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு. உடலுக்கு நல்ல சக்தியும், போஷாக்கும் கிட்டும் நோஞ்சான் அன்பர்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு முகம் பொழிவு பெறும் உடல் வனப்பு மிகும்.
இதேபோல் வேர்க்கடலை, கொண்டக்கடலை, கோதுமை, கம்பு, கேழ்வரகு போன்றவைகளை தினமும் ஒன்றாகத் தயாரித்துச் சாப்பிடலாம் முளை வேர்க்கடலைப்பால், முளை கம்புப்பால் = முளை கோதுமைப்பால் தயாரித்து அதனுடன் இனிப்புச் சேர்த்துச் -சாப்பிடச் சுவையோ சுவை அருமையான தெம்புதரும் பானம் ஆரோக்கியம் தரும் அதிசய பானம் மாட்டுப்பாலுக்குப் பதில் தேங்காயப்பால் மற்றும் முளைதானியப் பால்களை அதிகம் பயன்படுத்தி பிணிகளில் இருந்து விடுதலை பெறலாம் ஆஸ்துமா அன்பர்கள் நலம் பெற மாட்டுப்பால் தயிரை உடனடியாக நிறுத்தினால் உடனடி குணம் கிட்டும்.