ருசியான கதி பக்கோரா ரெசிபி !!

ருசியான கதி பக்கோரா ரெசிபி !!
X

கதி பக்கோரா

தேவையான அளவு :

கடலை மாவு - 1 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

வர மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

தண்ணீர் - தேவையான அளவு

தயிர் - 1 கப்

கடுகு விதை - அரை டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்

வர மிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிதளவு

நெய் - 2 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் பவுலில் 1 கப் கடலை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அவை பக்கோடா மாவு பதத்திற்கு வரும் வகையில் மிக்ஸ் செய்து சிறிய உருண்டைகளாக உருட்ட வேண்டும்.

இப்போது கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் உருட்டிய மாவை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.

இதற்கிடையில் மற்றொரு பவுலில் 1 டீஸ்பூன் கடலை மாவு, தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

இப்போது கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, பெருங்காயத் தூள், வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதில் ஏற்கனவே தயார் செய்துள்ள கடலை மாவை சேர்த்து, குறைவான நெருப்பில் 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு, மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் சமைத்துவிட்டு, பொரித்த உருண்டைகளை சேர்த்து கொதிநிலைக்கு வரவிடவும்.

இதற்கிடையில், கடாயில் நெய் விட்டு சீரகம் மற்றும் வர மிளகாய் பொடி சேர்த்து லேசாக வறுத்துவிட்டு, கடாயில் உள்ள கலவையில் சேர்த்தால் ருசியான கதி பக்கோரா தயார்.

Tags

Next Story