கடலூர் மாவட்டத்தில் நாளை மக்கள் குறைதீா் கூட்டம்
குறைத்தீர் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்ததுள்ளார்.
கடலூர் மாவட்டம், கடலூா், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய வட்டாட்சியா் அலுவலகத்தில் 20 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.இதில் பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், திருத்தம், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்களை முகாமில் அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Next Story