பிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான் திட்டம்

பிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான் திட்டம்

பிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான் 

பிரதான் மந்திரி சுரக்ஷித் மாத்ரித்வா அபியான் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம்,

• ஒவ்வொரு மாதமும் ஒன்பதாம் தேதி நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு வருகிறவர்கள் பற்றிய விவரங்கள் ஒரு பதிவேட்டில் பதியப்படும்.

• பதிவு செய்த பிறகு அங்குள்ள செவிலியர்கள் / உதவியாளர்கள் எல்லா விதமான ஆய்வகப் பரிசோதனைகளையும் செய்துவிடுவர், ஒரு மணி நேரத்திற்குள் அந்தப் பரிசோதனை முடிவுகள் கர்ப்பிணிப் பெண்களிடம் தரப்பட்டுவிடும். பின்னர் அந்த முடிவுகளோடு மகப்பேறு மருத்துவர் அவர்களைப் பரிசோதிப்பார். அதன் மூலம் ரத்தச்சோகை, கர்ப்பகால நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் நோய்த்தொற்று போன்றவை இருந்தால் அவர்களைத் தனியாக கவனித்து தொடர் மருத்துவம் தக்க ஆலோசனைகளும் வழங்கப்படும்.

• மேலும் கூடுதலாகப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தால் அவற்றைச் செய்து வருமாறும், அடுத்த முகாமில் அல்லது வழக்கமான மருத்துவ கவனிப்பின் போது மருத்துவரிடம் தெரிவிக்குமாறு சொல்லப்படும்.

• அல்ட்ரா சோனோகிராம் என்ற ஸ்கேன், ஹீமோகுளோபின் அளவு, சிறுநீர் அல்புமின், துரித மலேரியா பரிசோதனை, ரத்த வகைப்பாடு, உள்ளிட்ட அனைத்து விதமான அடிப்படையான பரிசோதனைகள் செய்யப்படும்.

• பேறு காலத்தில் ஏதேனும் அபாய அறிகுறிகள் தெரிகின்றனவா என்றும் குழந்தைப் பிறப்பின் போது சிக்கல்கள் ஏதேனும் இருக்குமோ என்றும் ஒவ்வொரு கர்ப்பினியுக்கும் விரிவான குறிப்புகள் பராமரிக்கப்படும்.

• ரத்த அழுத்த அளவு, அடிவயிற்றுப் பரிசோதனை கருவின் இதயத்துடிப்பு ஆகிய பரிசோதனைகள் கட்டாயமாக செய்யப்படும்.

• சிறப்பு முகாமில் செய்ய முடியாத வேறு ஏதேனும் பரிசோதனைகளைச் செய்ய வேண்டியிருந்தால், அதற்கான மாதிரியை உரிய இடத்திற்கு அனுப்பி பரிசோதனை முடிவைப் பெற்று சம்பந்தப்படட கர்ப்பிணியிடம் தருவார்கள்

• பிரசவத்தின் போது சிக்கல் ஏற்படலாம் என்று கண்டறியப்படுகிற கர்ப்பிணிகள் உயர் வசதிகள் கொண்ட சிசு சுரக்ஷா திட்டத்தின் உதவி மையத்தின் மூலம் வேண்டிய மருத்துவ வசதிகள் செய்யப்படும். அனைவருக்கும் MCP அடையாள அட்டை வழங்கப்படும்.

• கருவுற்ற ஆறாவது மாததிற்குள் / ஒன்பதாவது மாதத்திற்குள் ஒருமுறை அல்ட்ரா கவுண்ட் ஸ்கேன் எடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் இதற்கான செலவு ஜனனி சிசு சுரக்ஷா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

• ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ சேர்த்து ஆலோசனைகள் வழங்கப்படும். ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள், ஓய்வு, கர்ப்பகாலத்தில் பாலுறவு, பிள்ளைப் பேற்றுக்குத் தயாராவது, மருத்துவமனைகளில் பிரசவம் வைத்துக்கொள்வதன் அவசியம், பிள்ளைப் பிறந்த பின் கைகொள்ளக்கூடிய கருத்தடை முறைகள் போன்ற தகவல்கள் இந்த ஆலோசனைகளின் போது வழங்கப்படும்.

• கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் MCP அட்டையில் நான்கு விதமான வண்ணங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.

பச்சை வண்ணம் : எந்த விதமான அபாய அறிகுறியும் இல்லாதவர்

சிவப்பு வண்ணம் : பிள்ளைப் பேற்றில் அதிக அளவு அபாயம் இருக்கிறவர்

நீல வண்ணம் : கர்ப்பத்தினால் உயர்ரத்த அழுத்தம் ஏற்றபட்டவர்

மஞ்சள் வண்ணம் : கர்ப்பத்துடன் கூடிய நீரிழிவு தைராய்டு சுரப்பு அதிகமுள்ள நிலை போன்ற பிரச்சினைகள் உள்ளவர்

• ஜனனி சுரக்ஷா போஜனாவின் படி வழங்கப்படும் சலுகைகள் பற்றியும் ஜனனி சிசு சுரக்ஷா திட்டத்தின் படி உரிமையுள்ள சேவைகள் பற்றியும் அனைவருக்கும் எடுத்துரைக்கப்படும்.

• குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவது, இணை உணவுகள் வழங்குவது பற்றிய விவரங்கள் எடுத்துரைக்கப்டும்.

• தேவையில்லாத கர்ப்பம் அடைந்து விட்டவர்களுக்குத் தக்க ஆலோசனைகள் வழங்கிவிட்டு பாதுகாப்பான முறையில் கருக்கலைப்புக்கான வசதிகளும் செய்யப்படும்.

• ஆபத்தான பிரசவ கேஸ்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை, மாநில அரசின் ஆம்புலன்ஸ் சேவை அல்லது தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

Tags

Next Story