இரத்த சோகையை குணப்படுத்தும் 4 வகை உணவுகள்!!!
இரத்த சோகை
அனீமியா என்னும் இரத்த சோகை என்பது உடலில் போதுமான ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாததை குறிக்கும் நிலை. இரத்த இழப்பு, இரத்த சிவப்பணுக்களில் சேதம் அல்லது போதுமான இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உடலால் இயலாத நிலையில் இந்த இரத்த சோகை உண்டாகும்.
இரத்த சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் என்னும் புரதம் உள்ளது. இது இரும்புச்சத்து நிறைந்தது. உடலில் போதுமான இரும்பு இல்லாமல் உடல் முழுவதும் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை அளிக்க சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்க வேண்டும். மேலும் உடலில் வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் குறைபாடு உடலின் சிவப்பு இரத்த சிவப்பு அணுக்களை உருவாக்கும் திறனை பாதிக்கலாம். வைட்டமின் பி12 சரியாக செயல்படுத்த முடியாத போது மோசமான இரத்த சோகையை உருவாக்கலாம்.
1.இரத்த சோகையை குணப்படுத்தும் கீரைகள்: இலை கீரைகள் ஹீம் அல்லாத இரும்பின் சிறந்த ஆதாரம். எல்லா வகை கீரைகளும் குறிப்பாக நமது ஊரில் முருங்கைக்கீரை, முளைக்கீரை சொல்லலாம். இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை, கோஸ் போன்ற சில கீரைகளிலும் ஆக்சலேட்டுகள் அதிகம் உள்ளன.
இது இரும்புடன் சேர்ந்து உடல் ஹீம் அல்லாத இரும்பு உறிஞ்சுவதை தடுக்கும். கீரைகள் சாப்பிடும் போது ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களுடன் சேர்க்கும் போது உடல் இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கும். சில கீரைகள் இரும்பு மற்றும் வைட்டமின் சி சேர்ந்து உள்ளன.
2.இரத்த சோகையை குணமாக்கும் அசைவ உணவுகள்: கோழி இறைச்சிகளில் ஹீம் இரும்பு உள்ளது. விலங்குகளின் உறுப்பு இறைச்சிகள் கல்லீரல் இரும்பின் சிறந்த ஆதாரம் ஆகும். ஈரல் இரும்பு மற்றும் ஃபோலேட் நிறைந்துள்ளது. இதயம், சிறுநீரகம் மற்றும் மாட்டிறைச்சி போன்றவை இரும்புச்சத்து நிறைந்த உறுப்பு இறைச்சிகள். கடல் உணவில் ஹீம் இரும்பு வழங்குகிறது. சிப்பிகள், நண்டுகள், மட்டி மீன் மற்றும் இறால் போன்றவை நல்ல ஆதாரங்கள். பெரும்பாலான மீன்களில் இரும்புச்சத்து உள்ளது.
3.இரத்த சோகையை குணமாக்கும் பீன்ஸ் வகைகள்: பீன்ஸ் சைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சிக்கு மாற்றான ஒன்று. இரும்புச்சத்து நல்ல ஆதாரமாக இவை இருக்கும். இது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியவை. விலை குறைந்தவை சத்து மிகுந்தவை.
4.இரத்த சோகையை குணமாக்கும் கொட்டைகள் மற்றும் விதைகள்: சூரியகாந்தி விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள், வெள்ளரி விதைகள் மற்றும் பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் எல்லாமே ஆரோக்கியமானவை. சுவையிலும் குறையில்லாத இவற்றை சிற்றுண்டிகளாக சேர்க்கலாம். கொட்டைகள் மற்றும் விதைகள் வறுத்த பருப்புகள் மற்றும் பச்சை இரண்டிலும் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது.