பெண்களுக்கு மூட் ஸ்விங்க்ஸ் வர அடிப்படையான 5 காரணங்கள்!!

பெண்களுக்கு மூட் ஸ்விங்க்ஸ் வர அடிப்படையான 5 காரணங்கள்!!

மூட் ஸ்விங்க்

பெண்களுக்கு அதிகமாக உண்டாகின்ற மன ரீதியான பிரச்சினையாக இருந்தாலும் அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மூட் ஸ்விங்கினால் அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கிறது. சொல்லப் போனால் மூட் ஸ்விங் நேரங்களில் இயல்பு வாழ்க்கையிலேயே நிறைய மாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்... 1.பூப்படைதல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள்: மூட் ஸ்விங் உண்டாவதற்கு அடிப்படை காரணமே ஹார்மோன் மாற்றங்கள் தான். அவற்றின் தொடக்கமாகத் தான் இந்த பூப்படைதல் இருக்கிறது. பூப்படைதலின் போது உடலின் உள்ளுக்குள்ளும் வெளியேயும் மாற்றங்கள் ஏற்படும். அந்த சமயங்களில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் மூட் ஸ்விங் பிரச்சினையைச் சந்திக்கிறார்கள். 2. படிப்பில் ஏற்படும் அழுத்தம்: பெண் குழந்தைகளுக்கு தங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் படிப்பில் ஏற்படும் அழுத்தங்களாலும் வளரிளம் பருவத்தில் உள்ள பெண்கள் மனநல மாற்றங்களுக்கு ஆளாகிறார்கள். 3.வேலையில் ஏற்படும் அழுத்தங்கள்: உடல் ரீதியான மாற்றங்களையும் சமாளித்து, வேலை பார்க்கும் இடத்திலும் ஏற்படும் அழுத்தங்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். வேலையிடத்தில் பெண்களுக்கு உடல் ரீதியாக இருப்பதை விடவும் மன ரீதியான நிறைய தடைகளும் சிக்கல்களும் உண்டாகும். 4.​மாதவிடாய் மற்றும் மாதவிடாயின் முன்அறிகுறிகள்: பெண்களுக்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மாதம் மாதம் மாதவிடாய் சுழற்சி உண்டாகிறது. அதேபோல மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளிலும் சில பெண்கள் அவதிப்படுகிறார்கள். இந்த இரண்டு மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளின் போதும் மூட் ஸ்விங்க்ஸ் உண்டாகும். 5.​மன ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள்: மன ரீதியான பிரச்சினைகளாலும் மூட் ஸ்விங்க்ஸ் அதிகமாக உண்டாகும். குற்றவுணர்ச்சியாக இருக்கும் போது, மகிழ்ச்சி, சோகமாக போன்ற உணர்வுநிலை மாற்றங்களில் இருக்கும்போது, யாருடைய உதவியும் கிடைக்காத போது, நண்பர்கள், குடும்பம், பாட்னரை கையாளும்போது ஏற்படும் சிக்கல்களின் போது, சரியான தூக்கம் இல்லாதபோது,.. மூட் ஸ்விங்க்ஸை கட்டுப்படுத்துவது, சமாளிப்பது எப்படி? கீழ்வரும் சில வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த மனநல மாற்றங்களைச் சமாளிக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சி செய்தல், தியானம், யோகப் பயிற்சிகளை செய்வது, உறவுகளை சரியாகக் கையாள முயற்சி செய்வது, நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவுமுறை..

Tags

Next Story