40 வயதை தாண்டியதும் வரக்கூடிய ஆபத்தான 7 கண்நோய்கள் !!!

40 வயதை தாண்டியதும் வரக்கூடிய ஆபத்தான 7 கண்நோய்கள் !!!

கண்நோய்கள்

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்று சொன்னாலே அது கண் பார்வை மங்குதல் என்பது மட்டும் கிடையாது. அதற்கு முன்பு படிப்படியாக கண்களில் வெவ்வேறு கோளாறுகள் ஏற்பட்டு இறுதியில் அது கண்பார்வை குருட்டு தன்மையை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும் ஆபத்து இருக்கிறது. பொதுவாக கண்களில் ஏதேனும் பிரச்சனை வந்த பிறகு கண்களை பரிசோதிக்கும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. ஆனால் 20 வயதை கடந்த பின்பு ஆண்டுக்கு ஒரு முறையாவது கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது முக்கியம்.

1.பிரஸ்பியோபியா: பிரஸ்பியோபியா என்பது பெரியவர்களுக்கு ஏற்படும் கண் பிரச்சனைகளில் பொதுவான ஒன்று. அதாவது வயதானவர்கள் புத்தகங்கள் அல்லது செய்தித்தாள்கள் படிக்கும்போது அவற்றை தூரமாக வைத்து படிப்பதை பார்த்திருப்பீர்கள். அருகில் வைத்து பார்ப்பதில் சிரமங்கள் ஏற்படும்.

2. கண் வறட்சி: நம்முடைய கண்களில் உள்ள நீர் சுரப்பிகள் அதாவது கண்ணீர் சுரக்கும் சுரப்பிகள் பொதுவாக ஈரத்தன்மை உடையதாக இருக்கும். அவற்றின் சுரப்பு குறையும் பொழுது தான் கண்களில் வறட்சி ஏற்படுகிறது. இந்த கண் வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திடீரென கண்களில் கண்ணீர் சுரண்டு வெளிவருவதையும் பார்க்க முடியும்.

3.கண்களில் நீர் வடிதல்: நம்முடைய கண்களில் உள்ள கண்ணீர் வருகிறது அந்த சுரப்பிகள் சுரக்கக்கூடிய தன்மை அதிகமாகும் போது இயல்பை விட அதிகமாக நீர் உருவாகும்.

4. மாகுலர் சிதைவு: வயதாகும்போது ஏற்படும் கண் நோய்களில் இதுவும் ஒன்று. மாகுலர் என்பது நம்முடைய கண்களில் உள்ள லென்ஸின் ஒரு பகுதி. இந்த பகுதியில் தான் மில்லியன் கணக்கில் ஒலிகளை உணரும் நரம்பு செல்கள் இருக்கின்றன. நிறங்களை கண்டறிதல், முகங்களை அடையாளம் காணுதல் போன்றவை இந்த பகுதியில் தான் நடைபெறும். இந்த மாகுலர் பகுதியில் சிறைவு ஏற்படும் போது தான் எதிரே உள்ள நபர்கள் சரியாக தெரியாதது, நிறங்கள் சரியாக தெரியாமல் மங்கிய நிலையில் இருப்பது ஆகிய பிரச்சினைகள் உண்டாகின்றன.​

5. நீரிழிவு ரெடினோபதி: நாள்பட்ட நிலையில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தாமல் இருப்பவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்பட்டு அவை கண்ணழம்புகள் வரை பாதிக்கப்படும். அதன் விளைவாக ஏற்படுவது தான் இந்த நீரிழிவு ரெட்டினோபதி. இந்த பிரச்சினை வரும்போது கண்களில் உள்ள ரத்த நாளங்கள் பாதிக்கப்படும் இதனால் போதிய அளவு ரத்தம் கிடைக்கப் பெறாமல் பார்வையில் சிக்கல்கள் ஏற்படும்.

6.கிளைக்கோமா:கிளைக்கோமா என்பது ஒருவகை கண் நோய். இது நம்முடைய கண்களில் உள்ள பார்வை நரம்புகளை சேதப்படுத்தி கண் விழித்திரைக்கு முன்னால் திரவங்களை குவிக்கும். இவற்றால் கண்களில் அதிகப்படியான அழுத்தங்கள் ஏற்பட்டு பார்வை நரம்புகள் பாதிப்படையும். இந்த கிளைக்கோமால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பார்வை மங்கலாக தெரியும்.

​7.கண்புரை நோய்: கண்ணினுடைய விழித்திரை அதாவது லென்ஸை மேகமூட்டம் போல ஒரு குறை போல மெல்லிய புரத கொழுப்பு படிவம் அடைத்துக் கொள்ளும். இந்த கண்புரை நோய் வரும் பொழுது விழித்திரை வெளியிலிருந்து வரும் வெளிச்சத்தை அல்லது உருவங்களை சரியாக அடையாளம் கொள்ள முடியாமல் போகும்.

Tags

Next Story