கண் பார்வையை கூராக்க உதவும் 7 சூப்பர் உணவுகள் !!!

கண் பார்வையை கூராக்க உதவும் 7 சூப்பர் உணவுகள் !!!

கண் பார்வை 

கண் பார்வை என்பது ஒருவருக்கு மிகவும் அத்தியாவசியமானது. அந்த வகையில் சிலருக்கு கண் பார்வை அதன் கூர்மையை இழக்கும்.ஆரஞ்சு: வைட்டமின் C இதில் அதிகம் இருக்கும் என்பதால் கண்களின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்கும். கண்ணில் புரை விழுவதையும் இது தடுக்கும். முட்டை: இதில் உள்ள மஞ்சள் கருவில் லுடீன், ஜியாக்சாந்தின் மற்றும் கந்தகம் ஆகியவை உள்ளது. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கீரைகள்: லுடீன், ஜியாக்சாந்தின் ஆகிய இரு ஆண்டிஆக்ஸிடன்ட்களும் இதில் இருப்பதால் தீங்கு விளைவிக்கும் லைட்களில் இருந்து இது காப்பாற்றும். வயதானவர்களுக்கு வரும் கண் பிரச்னைகளையும் இது தடுக்கும். பாதாம்: வைட்டமின் E இதில் அதிகம் இருக்கிறது. இதுவும் கண்களுக்கு நன்மை அளிக்கக்கூடியதாகும். கேரட்: இதில் வைட்டமின் ஏ எனப்படும் பீட்டா கரோட்டின் உள்ளது. இது நல்ல கண்பார்வைக்கு உதவும். சர்க்கரை வள்ளிக்கிழங்கு: இதிலும் கேரட்டை போல் வைட்டமின் ஏ எனப்படும் பீட்டா கரோட்டின் உள்ளது. இது கண்பார்வையை கூராக்கும்.

Tags

Read MoreRead Less
Next Story