நலமாய் வாழ தினமும் ஒரு மூலிகை !! வாங்க பார்க்கலாம்....

நலமாய் வாழ தினமும் ஒரு மூலிகை !! வாங்க பார்க்கலாம்....

மூலிகை

நலமாய் வாழ தினமும் ஒரு மூலிகை உதாரணமாக திங்கள் கிழமையில் சந்திரனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் சந்திரன் ரத்த ஓட்டத்துடன் தொடர்புடையது. எனவே திங்கட்கிழமை ரத்தத்திற்கான மூலிகையை உண்பது நல்லது.

திங்கட்கிழமை அருகம்புல் சாறு உண்ணலாம். அருமை நண்பன் செய்யாததை அருகம்புல் செய்யும் என்று பழமொழி உண்டு. அருகம்புல் ரத்த புற்று நோயையும் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்தும்.

செவ்வாய்க்கிழமை வாழைத்தண்டு சாறு சாப்பிடலாம். வாழைத்தண்டு சாறு கொழுப்பை குறைக்கும், புதன்கிழமை கோவை இலைச் சாறு சாப்பிடலாம், கோவை இலை சாறு ரத்தத்தை தூய்மை செய்யும் ரத்த சர்க்கரையை குறைக்கும் தோல் நோய்களை நீக்கும்.

வியாழக்கிழமை வல்லாரை இலை சாறு உண்ணலாம், வல்லாரை மூளை திறனை வளர்க்கும் நினைவாற்றலை பெருக்கும் வாழையின் எல்லா பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. அதேபோல நாமும் மற்றவருக்கு பயன்பட வேண்டும்.

வெள்ளிக்கிழமை வில்வா இலைச்சாறு சாப்பிடலாம், வில்வா இலை சாறு ரத்த அழுத்தத்தை குறைக்கும் ,மன அமைதியை உண்டாக்கும், தியானத்தை எளிதாக்கும். சனிக்கிழமை கொய்யா இலை சாறு அல்லது வேப்பிலை இலைச்சாறு சாப்பிடலாம்.

வேப்பிலை சாறு உடலில் வெப்பநிலையை சமன்படுத்தும் உடல் தூய்மையைப் பாதுகாக்கும் மேற்கண்ட கிழமைகளில் குறிப்பிட்ட மூலிகைகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பது கட்டாயம் அல்ல தேவைக்கேற்ப வேறு மூலிகை சாறுகளும் சாப்பிடலாம்.

Tags

Next Story