நோயற்ற வாழ்வுக்கு...ஒரு கைப்பிடி வேர்கடலை போதும்!
வேர்கடலை
வேர்க்கடலையை ஊட்டச்சத்துக்களின் பவர் ஹவுஸ் என அழைக்கலாம். பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளதால் தான், அதனை ஏழைகளின் பாதம் என்று அழைப்பார்கள்.வேர்க்கடலையில், வைட்டமின் பி, வைட்டமின் ஈ, ஆரோக்கியமான கொழுப்பு சத்து, நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம் பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. ஊறவைத்த வேர்க்கடலையை முளைகட்டிய தானியங்கள் உடன் சாப்பிடுவது நோயற்ற வாழ்வை கொடுக்கும் என்பதோடு உடல் எடையை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். வேர்க்கடலையினால் கிடைக்கும் நன்மைகள்: வேர்க்கடலையின் தோலில் பைடேட் மற்றும் ஆக்ஸிலட் போன்ற கூறுகள் உள்ளன. இவை ஊட்டச்சத்துக்களை உடல் முழுமையாக உறிஞ்சி கொள்வதை தடுக்கிறது. எனவே வேர்க்கடலையை ஊற வைத்து உண்ணும்போது, பைடேட்டிங் தாக்கம் குறைந்து, ஊட்டச்சத்தை முழுமையாக உடல் உறிஞ்சி கொள்கிறது. ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விரும்பும் வேர்க்கடலையை, ஊற வைத்து காலையில் சாப்பிடுவதால், நாள் முழுவதும் ஆற்றல் நிறைந்திருக்கும். காலையில் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த வேர்க்கடலை சாப்பிடுவது, வயிற்றை சுத்தப்படுத்த உதவும். செரிமானத்தை மேம்படுத்தி, மற்றும் வாயுவில் இருந்து விடுதலை அளிக்கிறது..வேர்க்கடலையில் கலோரிகள் அதிகம் இருந்தாலும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் உடல் பருமனை குறைக்க வேர்க்கடலை உதவும். வேர்க்கடலை சுண்டல் என்பது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சிற்றுண்டி. இந்நிலையில் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவதால் எண்ணற்ற நலன்கள் கிடைக்கும்.