ரகசியம் நிறைந்த நாவல் பழம் !!!

ரகசியம் நிறைந்த நாவல் பழம் !!!

நாவல் பழத்தில் ப்ரோடீன், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் சி நிறைந்துள்ளதால், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் வைட்டமின் ஏ, சி உள்ளதால் கண்பார்வை திறனை அதிகரிக்கும்.


பெண் மலட்டுத்தன்மை குணமாகும். சிறுநீரகக் கற்களை உடைத்து வெளியேற்றும். மேலும் சிறுநீரகக்கற்கள் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாவல் பழக் கொட்டைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.


நாவல் பழம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். மேலும் புற்றுநோய் வராமல் தடுக்கும். வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும். நீரில் கரையக் கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றுக் கோளாறுகளை சரி செய்யும்.

நாவல்கொட்டை - பேதியை நிறுத்தும், ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும். ரத்த அழுத்தம், வாய்ப்புண், தொண்டைப்புண் இவைகளைக் நாவல் மரப்பட்டை குணமாக்கும்.


ஈறுகள் மற்றும் பற்களில் பிரச்சனை உள்ளவர்கள், நாவல் பழத்தினை உட்கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.




Tags

Next Story