மலிவான விலையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் புதினா !!
புதினா
மலிவான விலையில் அதிக அளவு மருத்துவ குணம் உள்ள புதினாவை உணவில் சேர்ப்பது போன்று புதினா பயன்படுத்தி தேநீர் தயாரிக்கலாம். புதினாவில் நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. தினமும் புதினா சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் பல வித நன்மைகள் கிடைக்கிறது.
தினசரி காலையில் எழுந்தவுடன் நம் அனைவருக்கும் ஏதேனும் ஒரு பிரச்சினை குறித்து மண்டையில் ஓடிக்கொண்டே இருக்கும். இதன் காரணமாக மன அழுத்தம் பாதிப்புகள் இருக்கலாம். இதனை நிர்வகிப்பதற்கு நீங்கள் தினசரி காலையில் புதினா டீ அருந்தலாம்.
புதினாவில் இருக்கும் மெந்தோல் ஆனது இயற்கையாகவே உடலில் தேககமாக உள்ள சளியை உடைத்து வெளியேற்றுகிறது. இதன் சூடான பண்புகள் ஈரப்பதம நிறைந்த பண்புகளானது வறண்ட இருமல் மற்றும் தொண்டைபுண் போன்றவற்றை போக்க உதவும்.
பருவகால மாற்றத்தில் மழை மற்றும் குளிர்காலங்களில் புதினா டீ குடிப்பது சளி தேக்கத்தை கட்டுப்படுத்த உதவும். மேலும் ஒவ்வாமை அறிகுறிகளுடன் இருக்கும் தும்மல், அரிப்பு மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட ஒவ்வாமை எதிர்விளைவு அறிகுறீகளை குறைக்கவும் செய்கிறது.
புதினா டீ குமட்டல் இருப்பவர்களுக்கு நிவாரணமாக இருக்கும். சிசேரியன் பிரசவத்துக்கு பிறகு பெண்களுக்கு குமட்டல் உணர்வு இருக்கும் அதை குறைக்க புதினா டீ உதவும் என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
புதினா டீ இயற்கையாக காஃபைன் அல்லாத மூலிகை தேநீர். புத்துணர்ச்சியூட்டும் சுவையை விரும்பினால் இந்த புதினா தேநீரை உட்கொள்ளலாம். மலச்சிக்கல், மற்றும் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தினசரி புதினா டீ அருந்தலாம். இது வயிற்றில் உள்ள செரிமான பிரச்சனைகளை சரி செய்து உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. மேலும் நமது வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கவும் புதினா தேநீரில் உள்ள பண்புகள் உதவுகின்றன.
தினசரி புதினா டீ அருந்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனை தினசரி அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.