ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறது - அறிகுறிகள் என்ன?
ADHD பாதிப்பு
ADHD என்றால் நோய் அல்ல, அது நரம்பியல் வளர்ச்சி கோளாறுதான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.முதலில் குறைப்பாட்டுக்கான அறிகுறிகள் இரண்டு வகை எனலாம். ஒன்று கவனக்குறைவுகள் மற்றொன்று ஹைபர் ஆக்டிவாக இருப்பது.
அறிகுறிகள்: வேலையிலோ அல்லது விளையாட்டு சார்ந்த நடவடிக்கையிலோ கவனம் செலுத்த இயலாமல் சிரமப்படுவது. பள்ளிகளில் கொடுக்கப்படும் ஹோம் வோர்க் அல்லது பிற அசைண்மண்ட்களில் அடிக்கடி கவனக்குறைவான தவறுகள் நடப்பது.
வேலைகளையும் மற்றும் செயல்பாடுகளையும் ஒழுங்கமைப்பதில் சிரமப்படுவது.. தொடர்ச்சியான மன ஈடுபாடு தேவைப்படும் பணிகளைத் தவிர்ப்பது அல்லது விரும்பாதது. வெளிப்புறங்களில் நடக்கும் விஷயங்களால் எளிதில் கவனச்சிதறல் அடைவது. அன்றாட நடவடிக்கைகளை மறப்பது ஆகியவற்றை கூறலாம். அதிலேயே ஹைப்பர் ஆக்டிவ் செயல்பாடுகளும் ADHD குறைபாட்டின் அறிகுறிதான். கை, கால்களை அசைத்துக்கொண்டே இருப்பது.
ஒரு இடத்தில் உட்கார முடியாமல் அங்குங்கு ஓடுவது,பொருத்தமற்ற சூழ்நிலைகளில் ஓடுவது, அமைதியாக விளையாடவோ அல்லது செயல்களில் ஈடுபடவோ இயலாதது அதிகமாக பேசுவது கேள்விகள் முடிவதற்குள் அடுத்தடுத்து பதிலப்பது, மற்றவர்களின் உரையாடல்களில் குறுக்கிடுவது ஆகியவற்றை கூறலாம்.
எதனால் வருகிறது- எதனால் ADHD வருகிறது என்பது இதுவரை மருத்துவ ரீதியாக உறுதிசெய்யப்படவில்லை. இருப்பினும் இது மரபணு ரீதியாகவும், மூளை அமைப்பு மற்றும் செயல்பாடு ரீதியாகவும், சூழலியலில் தாக்கம் சார்ந்தும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, குறைமாதத்தில் பிறப்பவர்கள், ADHD குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்கள், கரு இருந்தபோது மது மற்றும் புகையிலைக்கு வெளிப்பட்டவர்களுக்கு இந்த குறைபாடு உண்டாக்கலாம் என கூறப்படுகிறது.