அனைத்து சத்துகள் கிடைக்கும் அத்திப்பழம் !!

அனைத்து சத்துகள் கிடைக்கும்   அத்திப்பழம் !!

அத்திப்பழம்

உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் ஒருங்கிணைந்து கிடைப்பது அத்திப்பழத்தில்தான். அத்திப் பழத்தை ஃப்ரெஷ்ஷாகவும், உலர வைத்தும் சாப்பிடலாம். உலர் பழத்தில்தான் அதிக சத்து உள்ளது. பொரியல் போல செய்தும் சாப்பிடலாம், வேகவைத்தும் சாப்பிடலாம்.

உலர் அத்திப் பழத்தை அரைத்து, பால் சேர்த்து மில்க் ஷேக் போல குடிக்கலாம். எளிதில் செரிமானம் அடையக்கூடிய தன்மை அத்திப்பழத்துக்கு உண்டு. அதன் விதையில் உள்ள துத்தநாகம், தாமிரம் போன்ற தாது உப்புக்கள் வெண்புள்ளி, தோல் நிறமாற்ற பிரச்னைகளைக் குணமாக்க உதவும்.

அத்திப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம், ஆண்மைக் குறைவு, மலச்சிக்கல், மாதவிடாய்ப் பிரச்னைகள் தீரும். அத்தியில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளையும் பற்களையும் உறுதியாக்கும். அதில் காணப்படும் இரும்புச்சத்து ரத்த உற்பத்தியை அதிகப்படுத்தும். அத்திப்பழத்தில் காணப்படும் பொட்டாஷியம் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படாமல் தடுக்கும்.

Tags

Next Story