மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி இரவில் தூக்கம் வராததுதான்...சரியான தூக்கத்தை பெறுவது எப்படி?

மாரடைப்பின் ஆரம்ப அறிகுறி இரவில் தூக்கம் வராததுதான்...சரியான தூக்கத்தை பெறுவது எப்படி?
X

இன்றைய காலகட்டத்தில் தூக்கம் என்பது மறந்து போன விஷயம் ஆகும்...தூக்கம் இல்லாததும் மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாகும். போதிய தூக்கம் இல்லாததால் உங்கள் இதயம் பாதிக்கப்படலாம் மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.


இரவில் சரியான தூக்கம் இல்லாத போது, அது கவலை அல்லது சோகத்தை அதிகரிக்க செய்யலாம். சரியான தூக்கமில்லாத நபர்களின் உடல்கள் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இது அவர்களின் இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.


இது காலப்போக்கில் அதிகரித்து இரத்த நாளங்களை குறுகலாக மற்றும் கடினமாக்குவது போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். போதுமான அளவு தூங்காதது நம் உடல்களில் வீக்கத்தை உண்டாக்குகிறது, இது எடை அதிகரிப்பு மற்றும் இதயத்தை மிகவும் கடினமாக உழைக்கச் செய்வது போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.


சரியான தூக்கத்தை பெறுவது எப்படி?

இரவில் காபி அல்லது எனர்ஜி பானங்கள் போன்றவற்றைக் குடிக்காமல் இருக்கவும். தூங்கும் முன் சிகரெட்டைத் தவிர்க்கவும். உங்கள் படுக்கையறையை நல்ல இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருங்கள்.


இரவில் யோகா, அமைதியாக உட்கார்ந்து யோசிப்பது அல்லது உங்கள் தசைகளை ஒவ்வொன்றாக ரிலாக்ஸ் செய்வது போன்ற விஷயங்களைச் செய்வது உங்களுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து நன்றாக தூங்க உதவும்.


ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வதும், எழுந்திரிப்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தூங்குவதில் சிக்கல் இருந்தால், மருத்துவர் அல்லது தூக்க நிபுணரை சந்திப்பது நல்லது. சரியாக தூங்காதது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பெரிய உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இரவில் நன்றாக தூங்கவும், அதே நேரத்தில் இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.








Tags

Next Story