மண் குளியல் செய்தால் இவ்வளவு நன்மைகளா?

மண் குளியல் செய்தால் இவ்வளவு நன்மைகளா?

மண் குளியல்

தொழுநோய்,வெண் குஷ்டம், சோரியாசிஸ், மற்றும் இதர தோல்நோய் உள்ளவர்களுக்கும், உடற்சூடு அதிகமுள்ளவர்களுக்கும் இக்குளியல் மிக்க பயன் தரும். வாரமொரு முறை இக்குளியல் எடுக்கலாம் கரையான் புற்று மண் மிகவும் ஏற்றது. அல்லது பசையுள்ள செம்மண், வண்டல் மண், களிமண் ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். இரசாயன உரமிடாத இயல்பான மண்ணாக இருத்தல் வேண்டும்.

மண்ணை நன்கு பொடியாக்கி, சலித்து, அம்மண்ணில் தேவையான அளவு பச்சைத் தண்ணீர் ஊற்றி, நன்கு குழைக்கவும் காதுகளில் மண் உள்ளே போகாமல் இருக்கப் பஞ்சைக் காதுக்குள் வைத்துக் கொள்ளவும். அவ்விதம் குழைத்த மண்ணை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுவதும். சந்தனம் பூசுவது போல் நன்கு கெட்டியாகப் பூசவும் உடலில் ஜட்டி மட்டும் அணிந்துகொள்ளவும். பின்னர் சுமார் முப்பது நிமிடங்கள் வெயிலில் காயவும் மதியம் சுமார் 11 மணி முதல் 12 மணியளவில் இக்குளியல் எடுக்கலாம். வெயிலில் உடல் முழுவதும் காயக் காய மண் நன்கு உலர்ந்து வெடிப்பு ஏற்பட்டு, தோலை இழுப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

உடலில் பூசிய மண் காய்ந்தபின் சிறிது நேரம் நிழலில் இருந்து பின் தண்ணீரில் நன்கு குளிக்கவும் உடலில் குளிர்ச்சி ஏற்படும் தோலும் மிருதுவாக இருக்கும். உடலிலுள்ள நச்சுக்களை மண் உறிஞ்சி, உடலும் தூய்மை பெறும்.

Tags

Next Story