வெயிலில் நீங்க நலமா ? கோடை வெயிலை சமாளிக்கும் தீர்வுகள் !!!

வெயிலில் நீங்க நலமா ? கோடை வெயிலை சமாளிக்கும் தீர்வுகள் !!!

கோடை வெயில்

வெயில் கொளுத்தும் மத்திய நேரத்தில் உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம் வெயிலில் அலையும் வேலை செய்பவர்கள் அடிக்கடி நிழலான இடங்களில் ஓய்வெடுத்து தண்ணீர் குடித்துவிட்டு வேலையை தொடர்வது நல்லது வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பதால் நீரோடு சேர்ந்து சோடியம் குளோரைடு போன்ற உப்புச் சத்துக்களும் உடலில் இருந்து வெளியேறுகின்றன.




இவை உடலில் படிவதால் அரிப்பு ஏற்படும் வீட்டுக்கு வந்து சற்றே வியர்வை அடங்கிய பிறகு குளிக்க வேண்டும் அப்படியே விட்டால் பூஞ்சை தொற்று வியர்க்குரு தடிப்பு என ஏதாவது பிரச்சனை வரும் சிலருக்கு வெயில் சூட்டினால் மூக்கில் இருந்து ரத்தம் வரலாம் அடிக்கடி தயிர் சாதம் சாப்பிட்டால் இந்த பிரச்சினையை தவிர்க்கலாம் மோர் இளநீர் லேசி ஜூஸ் என்று குடித்தும் குளிர்ச்சி அடையலாம்.


இளநீர் தர்பூசணி மாதுளை சாப்பிடுவதால் கொப்புளங்கள் வேனல் கட்டிகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது நுங்கை மசித்து தடவினால் குணமாகும் தலை அதிகம் வியர்த்து முடி நனைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தலையில் ஈரம் தங்கினால் ஜலதோஷம் பிடிக்கும் இப்படி சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் சாத்துக்குடி பழச்சாற்றை வெந்நீர் அல்லது இஞ்சி சாற்றுடன் சேர்த்து குடித்தால் நல்லது வெயிலில் செல்லும் போது முகம் கை கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாம்.




சருமம் வறட்சியாகாமல் இருக்கும் வாரம் இரு முறை எண்ணை தேய்த்து குளிக்கவும் சிலருக்கு சூட்டினால் வயிற்று வலி வரும் இரண்டு டீஸ்பூன் கசகசாவை மிக்ஸியில் அரைத்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் பாலில் சேர்த்து அழகாக சக்கரை போட்டு சாப்பிட்டால் என்ன வயிற்று வலி பறந்து போகும்.

கோடை வெயிலால் நிறைய வியர்வை வெளியேறினால் உடலில் நீர்ச்சத்து குறைந்து விடும் நீர் எரிச்சல் நீர்க்கடுப்பு போன்றவை உருவாகும் சிறிது கருப்பட்டியையும் ஒரு துண்டு புலியையும் நீரில் கலந்து கிராமங்களில் பானகம் என்ற பானத்தை குடிப்பார்கள். இது உடலுக்கு நீர்ச்சத்தை கொடுப்பதோடு நீர்க்கடுப்பையும் குறைக்கும் வியர்வை அதிகமாக வெளியேறும் போது உடலுக்கு அவசியமான தாது உப்புகளும் வெளியேறி உடலை துவண்டு போக செய்யும் வெறுமனே தண்ணி குடிப்பதற்கு பதிலாக உப்பு சேர்த்த கஞ்சி தண்ணீரில் நீர் மோர் பழச்சாறு சாப்பிட்டது சரி செய்யலாம்.

கோடைகாலத்தில் இப்படி நீர்ச்சத்து குறைவதால் உடலில் மாற்றங்கள் உண்டாக்கி சிலருக்கு சிறுநீரக கல் பாதிப்பு ஏற்படும். எலுமிச்சை சாறு இளநீர் மோர் பருகுவதும் தர்பூசணி வெள்ளரிக்காய் சாப்பிடுவதும் இப்படி கல் உருவாவதை தடுக்கும் கோடையின் மிக ஆபத்தான பிரச்சனை ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும். வெப்பத்தாக்கு முதியவர்கள் குழந்தைகள் சக்கரை நோயாளிகள் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் தலை வழுக்கை உள்ளவர்கள் குண்டான உடல்வாக்கு கொண்டவர்களுக்கு வெயில் கொளுத்தும் நேரத்தில் உடலில் உஷ்ணம் அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் உருவாக்கிறது.




ஹீட் ஸ்ட்ரோக் தாக்கி மயக்கமடைந்தவர்களை முகம் வானத்தை பார்க்கின்ற மாதிரி நிழலான தரையில் படுக்க வைக்க வேண்டும். இது உயிரைக் காப்பாற்றும் கோடை காலத்தில் வரும் அக்கி அம்மை நோயை தவிர்ப்பதற்கு வெள்ளரியின் கீர்ணிப்பழமும் மகத்தானது.

கோடை நாட்களில் குழந்தைகளை பிளாஸ்டிக் ரப்பர் சீட்டுகளை படுக்க வைக்க கூடாது அதன் மீது ஒரு துணியை விரித்து படுக்க வைக்கலாம். குழந்தைகள் காற்றோட்ட மான இடத்தில் எப்போதும் இருக்க வேண்டும் இது வியர்க்குரு வருவதை தடுக்கும்.

Tags

Next Story