செயற்கை இதயம் எப்படி உருவானது ?

செயற்கை இதயம் எப்படி உருவானது ?

செயற்கை இதயம்

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி யாளரான டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவர் செயற்கை இதயத்தை முதலில் கொடுத்தார். வடிவமைத்து க் கொடுத்தார். 'டாக்டர் வில்லியம் டெவ்ரீஸ்' என்னும் அமெரிக்க மருத்துவர் முதல் செயற்கை இதயத்தை வெற்றிகரமாக 'பார்ஸிக் கிளார்க்' என்னும் நோயாளிக்குப் பொருத்தினார்.

இது நடந்தது 1984-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். இந்த நோயாளி நான்கு மாதம் வாழ்ந்து நிமோனியாவால் இறந்து விட்டார்.

இரண்டாவதாக, இதே டாக்டரால் செயற்கை இதயம் பெற்ற 52 வயது நோயாளியான 'ஷிரோடர்' என்பவர் இன்னும் உயிருடன் இருக்கிறார். இது நடந்தது. 1985-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில். செயற்கை இதயம் உடைந்து விட்டால்தான் அந்த நோயாளி இறந்து விடுவார். அதுவரை நோயாளி எந்தவிதத் தொல்லையும் இல்லாமல் வாழலாம்.

செயற்கை இதயம் பொருத்த இந்திய மதிப்புப்படி சுமார் 16 லட்சம் ரூபாய் செலவு ஆகும். டாக்டர் ஜார்விக் பிளாஸ்டிக் அலுமினியப் பொருள்களைக் கொண்டு புதிய செயற்கை இதயத்தைச் செய்யவிருக்கிறார். செயற்கை இதயம் பெற்றவர்கள் 'கம்ப்ரெஸர்' என்னும் காற்றழுத்தக் கருவியையும் உடலில் பொருத்திக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் ஆறு மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 50 பேர்களுக்கு செயற்கை இதயம் பொருத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. செயற்கை இதயத்தை அமைத்த டாக்டர்களான ஜார்விக், டெவ்ரீஸ் ஆகிய இருவரும் மனித குலத்துக்குப் பெரிதும் உதவி செய்துள்ளார்கள்.

Tags

Next Story