சர்க்கரை நோயாளிகளின் கால்களின் கவனத்திற்கு....

சர்க்கரை நோயாளிகளின் கால்களின் கவனத்திற்கு....

சர்க்கரை நோயாளி

சர்க்கரை நோயாளிகள் காலில் செருப்பு இல்லாமல் நடக்கக்கூடாது. வீட்டினுள்ளும் கண்டிப்பாகச் செருப்பு அணிய வேண்டும். செருப்பு அணிவதற்கு முன்னர் அதில் முள், ஆணி எதுவும் குத்தியிருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

புதிய செருப்புகள் கால்களைக் கடிக்கும் என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன் கால்களில் எண்ணெய் தடவுவது நல்லது. காலில் சிறு புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை எடுக்க வேண்டும்.

கால் நகங்களை வெட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். தோலுடன் சேர்த்து மிகவும் நெருக்கி நகங்களை வெட்டக்கூடாது. கால்களை வறட்சியாக வைத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவரின் ஆலோசனையுடன் தேங்காய் எண்ணெய், மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்தலாம்.

கால்களில் ஏதேனும் மாற்றங்கள், புண்கள் இருப்பது தெரிந்தால் | உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக உடலில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டியது மிக மிக அவசியம்.

Tags

Next Story