அவகாடோ ஜூஸ்!! எக்கச்சக்க நன்மைகள்!!!
அவகாடோ ஜூஸ்
அவகாடோ ஜூஸ் அல்லது பட்டர் புரூட் ஜூஸ் என்று அழைக்கப்படும்.வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடும்போது அவை இன்னும் நன்மை கிடைக்கும்.
அவகாடோவின் உள்புறம் இருக்கும் கொட்டை போன்ற பகுதியை அகற்றிவிட்டு, நடுவில் இருக்கும் பழ பகுதியை மட்டும் தனியாக எடுத்து பால் உடன் மிக்ஸியில் போட்டு அடித்தும் கூட நீங்கள் வீட்டிலேயே இதன் ஜூஸை குடிக்கலாம்.
அவகாடோ ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
கண்புரை மற்றும் தசை சிதைவு ஆகியவற்றின் ஆபத்துகள் குறையும்.
இதில் உள்ள ஃபைபர் உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க அவகாடோ ஜூஸ் உபயோகமாக இருக்கும்.
ஓலியிக் அமிலம் என்ற நல்ல கொழுப்பு இதில் இடம்பெற்றுள்ளதால் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்.
அவகாடோ ஜூஸை குடிப்பவர்களுக்கு இதயம் சார்ந்த கோளாறுகள் ஏற்படுவது குறைவு.
இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், ரத்த அழுத்த அளவும் கட்டுக்கோப்பாக இருக்கும்.
டைப்-2 நீரிழிவு பிரச்னைக்கு அவகாடோ தீர்வளிக்கிறது.
இதை வெறுமையாக ஜூஸ் போட்டு குடிக்கும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்றம் இருக்காது.