ஓம நீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் !!
ஓம நீர்
ஓமத்தை வழக்கமாக எடுத்துக் கொள்வதால் உடல் ஈர்க்கும் கொலஸ்ட்ரால் மட்டுமல்லாது, ட்ரைகிளிசரைட் அளவும் குறைகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஓமம், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கொலஸ்ட்ராலை எரிக்கும் ஓமம்: கொழுப்பை கரைக்கும் திறன் கொண்ட சிமாவா ஸ்டேடின் என்ற பொருள் உள்ளதே இதற்கு காரணம். இதனை சரியான வகையில், சரியான விதத்தில் பருகி வந்தால் மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கலாம். செரிமான பிரச்சனைகளை நீக்கும் ஓமம்: அசிடிட்டி போன்ற செரிமான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், ஓம விதைகளை எடுத்துக் கொள்வதால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்பதோடு, செரிமான திறனையும் மேம்படுத்த உதவும். உடல் பருமனை குறைக்க உதவும் ஓமம்: உடல் பருமன் இன்றைய காலத்தில் பொதுவான பிரச்சனையாகி விட்டது. இந்நிலையில் ஓமநீரை எடுத்துக் கொள்வதால், வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் பருமன் குறைகிறது. இருமலை தீர்க்கும் ஓமம்: இருமலை குணமாக்கும் பண்பு உள்ள இது, நுரையீரல் இதற்கான காற்றோட்டத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.