காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதன் பயன்கள்
தண்ணீர்
உடலில் நீர்ச்சத்தினை தக்க வைத்து கொள்வதற்கும், ஒட்டுமொத்த உடல் நலனை பாதுகாத்து கொள்வதற்கும் தண்ணீர் பயன்படும்.காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் சராசரியாக ஒருவர், 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று கூறுகின்றனர், மருத்துவர்கள். இது கிட்டத்தட்ட 3 கிளாஸ் தண்ணீரின் அளவுக்கு சமமாகும். காலையில் எழுந்தவுடன் 1 லிட்டர் தண்ணீர் குடித்தால் உடலில் மெட்டபாலிச சத்துகள் அதிகரித்து, அஜீரண கோளாறுகள் சரியாகும் என்கின்றனர் மருத்துவர்கள். வெதுவெதுப்பான நீரை காலையில் அருந்துவதால், அதில் உள்ள வெப்பத்தன்மை செரிமான மண்டலத்தை தூண்டி, அன்றைய நாளுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.
நன்மைகள்;
1.மெட்டபாலிச சக்தியை அதிகரிக்கும்: நாம், சரியாக 8 மணி நேரம் வரை தூங்குகிறோம். 8 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிப்பது, உடலின் மெட்டபாலிச சக்தியை அதிகரிக்க உதவும். இதனால், செரிமான சக்திகள் அதிகரிக்கும். உடலில் ஆற்றல் சக்தி அதிகரித்து அன்றைய நாள் முழுவதும் உடலை ஆக்டிவாக வைத்திருக்க உதவும்.
2. மன நலனுக்கு நல்லது: இரவில் தூங்கும் போது, மூச்சு விடுவது, வியர்வை விடுவது ஆகியவை மன நிலை சம்பந்தப்பட்ட ஆற்றல்களாக இருக்கும். இதனால் காலை எழுந்து கொள்ளும் போது சிலருக்கு சோர்வான உணர்வு ஏற்படும். அதனால், எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது, மன நலனுக்கு நன்மை பயக்கும்.
3.மூளை செயல்பாட்டினை அதிகரிக்கும்: அறிவாற்றலுக்கும் செயல்திறனுக்கும் உடலை நீர் சத்து மிக்கதாக வைத்திருப்பது முக்கியம். போதுமான தண்ணீர் குடிப்பது மூளைக்கு செல்லும் நரம்பியல் செயல்பாடுகளையும் ஊக்குவிக்கிறது. இது, நாள் முழுவதும் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.
4.நச்சுகளை நீக்கும்: முந்தைய நாள் சாப்பிடும் உணவு பொருட்களின் கழிவுகள், உடலில் இரவு முழுவதும் தங்கிவிடுகிறது. இந்த நச்சுகளை, காலையில் தண்ணீர் குடிப்பது மூலம் அகற்ற முடியும். தண்ணீர், இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இதனால், சிறுநீரக செயல்பாடும் அதிகரிக்கும்.