தினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!

தினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!!

தயிர் 

உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க தயிர் நமக்கு உதவும்.தயிரில் புரதம், கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் புரோபயாடிக்குகள் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இன்றைய பிஸியான வாழ்க்கையில் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக உள்ளது.

1.செரிமானத்தை மேம்படுத்துகிறது: தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகின்றன. இது செரிமான செயல்முறையை ஆரோக்கியமாக வைத்து மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.

2.எலும்பு ஆரோக்கியம்: தயிரில் அதிக அளவில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் ஆகியவை உள்ளன. இந்த இரண்டு தாதுக்களும் எலும்புகளை வலுப்படுத்தவும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

3. எடை இழப்பு: தயிரில் அதிக புரதச்சத்து உள்ளது. இது வயிற்ருக்கு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. மேலும் இது ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை நாம் உட்கொள்வதையும் தவிர்க்க உதவுகிறது. இது எடையை குறைக்க உதவுகிறது.

4. நீரிழிவு நோய்: தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.மேலும், தயிரின் கிளைசெமிக் இண்டெக்ஸ் மிக குறைவாகும். ஆகையால் இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது.

5. நோய் எதிர்ப்பு சக்தி: தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. நோய்த்தொற்றிலிருந்து உடலைப் பாதுகாப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆகையால் தயிர் சாப்பிடுவது நமது வலிமையை அதிகரிக்கின்றது.

Tags

Next Story