கற்பூரவள்ளியின் பயன்கள்!!

கற்பூரவள்ளியின் பயன்கள்!!

கற்பூரவள்ளியின் பயன்கள்!!

வைட்டமின் C, A, B6 சத்துக்கள், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கால்சியம் என பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள ஓமவல்லி. இருமல், சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தொண்டைப்புண், காய்ச்சல் என பல நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.வெறும் வாயில் மென்று தின்று வெந்நீர் குடிக்கலாம் அல்லது சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது நல்லது.. சமையலில் ஓமவல்லியை பஜ்ஜியாகவும், ரசமாகவும், தேநீராகவும் சமைத்து உண்ணலாம்..ஓமவல்லி இலையையும், துளசியையும் சேர்த்து கொதிக்கவைத்து தேன் கலந்த தேநீர் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது, பூஞ்ஜைகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது. வைரஸ்களை எதிர்க்கும் தன்மை கொண்டது ஓமவல்லி. சுவாச பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட கற்பூரவல்லியில், ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள் உள்ளது.பற்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்ப்பது, தலைமுடி வளர்ச்சி மற்றும் சருமத்தின் பொலிவை மேம்படுத்தும் குணத்தையும் கொண்டது.காயங்களை ஆற்றும் தன்மை கொண்ட ஓமவல்லி, அழற்சிக்கு எதிரானது.

Tags

Next Story