தமிழ் மண்ணின் மருத்துவங்களான ஓமம் - கொத்தமல்லி விதை நன்மைகள் !!

தமிழ் மண்ணின் மருத்துவங்களான ஓமம் - கொத்தமல்லி விதை நன்மைகள் !!

 ஓமம் - கொத்தமல்லி விதை  நன்மைகள்

ஓமம்: ஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள் மற்றும் மாதவிடாய் வலியை குணமாக்கலாம்.

வலி நிவாரணியாகவும் பசியைத் தூண்டவும் உதவுகிறது. வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்றவை நீக்கவும் பயன்படுகிறது. ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.




கொத்தமல்லி விதை:

ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊறவித்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உயர் ரத்த அமுத்தத்தை கட்டுபடுத்தலாம்.

கொத்தமல்லி விதைகள் சிறுநீரகத்தின் வடிகட்டுதல் விகிதத்தை மேம்படுத்துவதால், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இது உடலில் குறைந்த நீர் தக்கவைப்புக்கு வழிவகுக்கிறது மற்றும் நச்சுகள் மற்றும் நுண்ணுயிரிகளை வெளியேற்ற அனுமதிக்கிறது. இது சிறுநீர் மண்டலத்தை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.





Tags

Next Story