தலைக்கு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தலைக்கு எண்ணெய் வைப்பதால் கிடைக்கும்  நன்மைகள்

எண்ணெய்

தலைமுடிக்கு எண்ணெயை தடவுவது பல்வேறு நன்மைகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எண்ணெய்கள் கூந்தலின் நுண்ணறை செல்களில் உள்ள இடைவெளிகளை நிரப்புகின்றன. இதன் மூலம் தேவையற்ற அழுக்குகள் நுண்ணறைகளில் தங்குவதை இவை தடுக்கின்றன.தலைமுடி ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருப்பதற்கு எண்ணெய்கள் உதவுகின்றன.மன அழுத்தம் தீரும்: எண்ணெய் தேய்த்து தலையில் அப்படியே மசாஜ் செய்யும்போது, தேவையற்ற மன அழுத்தம் நீங்கும். சொறி எடுக்காது: பல பேருக்கும் தலையில் அடிக்கடி சொறி எடுக்கும். தினமும் எண்ணெய் வைக்கும்போது சொறி எடுக்காது. கருப்பாக இருக்கும்: தினமும் எண்ணெய் தேய்க்கும் போது, தலைமுடி வெள்ளையாகவோ, செம்பட்டையாகவோ எளிதில் மாறாது. பொடுகில் இருந்து விடுதலை: தினமும் தலைக்கு எண்ணெய் வைத்து வரும் பொடுகு பிரச்னை தீரும்.

அடர்த்தி: தினமும் எண்ணெய் தேய்த்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். இதன்மூலம் தலைமுடி அடர்த்தியாகும்.

முடி கொட்டாது: முக்கிய பிரச்னையான தலைமுடி கொட்டவே கொட்டாது. தலைக்கு எண்ணெய் தடவுவது என்பது ஒரு ஆயுர்வேத முறையாகும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதைத் தினசரி பழக்கமாக்கிக்கொள்ளவும். இது நமது கூந்தலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும்.

Tags

Next Story