தர்பூசணி விதைகளில் இருக்கும் நன்மைகள்!!

தர்பூசணி விதைகளில் இருக்கும் நன்மைகள்!!

தர்பூசணி

வெயில் காலம் ஆரம்பித்தாலே நம் நினைவிற்கு வரும் பழங்களுள் முதன்மையான இடத்தை பெற்றிருப்பது, தர்பூசணிதான். உடலில் நோயெதிர்ப்பு சக்தியை தர்பூசணி விதைகள் அதிகரிக்கும். தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளிலும் ஜிங்க், மாக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சில கொழுப்பு சத்துகள் இருக்கின்றன. தர்பூசணி பழ விதைகளை சாப்பிடுவதால் உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: தர்பூசணி விதையில் Zinc சத்து அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இது, உடலில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் . நல்ல கொழுப்புகள்: தர்பூசணி விதையில் இருக்கும் நல்ல கொழுப்புகள் உடலுக்கு, நற்பயன் அளிக்கும். இரத்தத்தில் கொழுப்பு கலக்காமல் தடுப்பதற்கு இந்த நல்ல கொழுப்புகள் தேவை என்கின்றனர் மருத்துவர்கள். செரிமானத்தை மேம்படுத்துகிறது: தர்பூசணியையும், தர்பூசணி விதைகளையும் உட்கொள்வது செரிமானத்தை அதிகரிப்பதில் பங்கு வகிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். முடிக்கு நல்லது: தர்பூசணி விதைகளில் இரும்புச்சத்து, புரதம், மக்னீசியம் சத்துகள், முடி ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க உதவுமாம். பூசணி விதைகளால் ஏற்படும் மாங்கனீசு எனும் திறன், முடியை உடைவதில் இருந்தும் உதிர்வதில் இருந்தும் பாதுகாக்கிறது. எலும்புகளை வலுவாக்க உதவும்: எலும்புகளை வலுவாக்க கண்டிப்பாக தர்பூசணி விதைகள் உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வலுவான தசையை உருவாக்கவும், நரம்பு தளர்ச்சி ஏற்படாமல் தடுக்கவும் கூட, தர்பூசணி விதைகள் உதவும் என கூறப்படுகிறது.

Tags

Next Story