சுரைக்காயில் இருக்கும் ரகசியம்!!!

சுரைக்காயில் இருக்கும் ரகசியம்!!!

சுரைக்காய் 

சுரைக்காயில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், மக்னீசியம், துத்தநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல சத்துக்கள் உள்ளன. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் கொழுப்பு குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். சுரைக்காயில் கொழுப்பு இல்லை. ஆகையால் இதை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சேராது. மேலும் இது கூடுதல் கொழுப்பையும் எரித்து வளர்சிதை மாற்ற விகிதத்தையும் மேம்படுத்துகிறது. சுரைக்காயில் அதிக நீர்சத்து உள்ளது. இது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இதில் அதிக அளவு உணவு நார்ச்சத்தும் உள்ளது. இதன் காரணமாக இதை உட்கொள்வதால் நமக்கு நிறைவான உணர்வு ஏற்படுகின்றது. இதனால் அவ்வப்போது பசி எடுக்காது.வயிற்று கொழுப்பைக் குறைக்க சுரைக்காய் சாறு உட்கொள்வது நல்லது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிப்பதால் அதிக நன்மை கிடைக்கும்.சுரைக்காயில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. ஆகையால், இது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இதன் காரணமாக உடல் ஆற்றலுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்கின்றது.சுரைக்காயில் மிக குறைவான கலோரிகளே உள்ளன. இதை சாப்பிடுவதால், வயிற்றில் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு கிடைக்கும். வயிற்றில் நிரம்பிய உணர்வு இருப்பதால், அடிக்கடி பசி ஏற்படாது. இதனால் தேவையற்ற ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.

Tags

Next Story