பித்தம் தணிக்கும் பஸ்திரிகா!

பித்தம் தணிக்கும் பஸ்திரிகா!

 பஸ்திரிகா

பஸ்திரிகா என்றால் துருத்தி அடுத் தடுத்து மூச்சை வலுவாகவும் வேகமாகவும் வெளிவிடுவது இந்த பிராணாயாமத்தின் தன்மை. இதுதான் துருத்தி போன்று வேகமான செயல்பாடு ஆகும்

பஸ்திரிகா தொண்டையின் வீக்கத்தையும் வாயு உபாதையையும் போக்குவதுடன் சூட்டைத் தணிக்கவும் செய்யும் மூக்கிலும் மார்பிலும் உண்டாகும் வியாதிகளைக் குணப்படுத்துவதுடன் ஆஸ்துமா, காசநோய். அதிகப்படியான பித்தம் முதலியவைகளை அறவே அழிக்கிறது உடலுக்கு வெதுவெதுப்பைக் கொடுத்து ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

வழக்கப்படி ஏதாவது ஒரு உட்கார்ந்திருக்கும் நிலையில் மூக்கு வழியே வேகமாகவும் ஆழமாகவும் அடுத்தடுத்தும் மூச்சுவிடுவது நிகழ வேண்டும்.

ஒவ்வொரு முறையும் மூச்சை இழுக்கும் போது அடிவயிறு விரிந்தும் வெளிவிடும் போது அடிவயிறு சுருங்கவும் வேண்டும் நம் சக்திக்கேற்றவாறு ஒரு சுற்றுக்கு ஆறு அல்லது எட்டு அல்லது பத்து என்ற கணக்கில் மூச்சுவிடத் தொடங்கவும் ஒவ்வொரு சுற்றின் இறுதியில் ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்து நமக்கு சௌகாயப்படும் வரை மூச்சை நிறுத்தி பின்பு விடவும். சுற்றுக்குச்சுற்று சிறிது ஓயவு கொடுத்தல் நலம் நுரையீரல்களுக்கு அதிகமாகத் தொல்லை தராமல் பார்த்துக்கொள்ளவும் தொடக்கத்தில் இரண்டு அல்லது மூன்று சுற்றுக்கள் செய்யலாம் ஒவ்வொரு சுற்றிலும் நொடிக்கு ஒன்றாக ஆறு முதல் பத்து வரை மூச்சை வெளிவிடுமாறு பார்த்துக்கொள்ளவும்.

நாட்கள் செல்லச்செல்ல ஒரு சுற்றுக்கு இருபது முதல் முப்பது வரை மூச்சை இழுப்பதும் வெளிவிடுதலும் செய்வது இரண்டு அல்லது மூன்று சுற்று இருக்கலாம்.

Tags

Next Story