முடி பிரச்சனைய தக்காளி சரி பண்ணுமா ?? புதுசா இருக்கே !! வாங்க எப்படி பயன்படுத்துவது பார்க்கலாம் ...
tomato
தலைமுடி உதிர்வு, பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு கொடுத்து முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த தக்காளி உதவும். பெரும்பாலான உணவுகளில் நாம் தக்காளியை சேர்த்துக் கொள்கிறோம் என்றாலும் தக்காளியை கூந்தலிலும் நேரடியாக பயன்படுத்தும் போது அவை மிகச் சிறந்த பலனை தருகின்றன.
தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் பண்புகள் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. முடி உதிர்வு பிரச்சனைக்கு வழிவகுக்கும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடக்கூடிய தன்மை தக்காளியில் உள்ள பண்புகளுக்கு உள்ளது.
பொடுகு பாதிப்பு இருந்தால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். எனவே முதலில் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பொடுகு பிரச்சனைகளை சரி செய்ய வேண்டியது அவசியம். தக்காளியில் நிறைந்துள்ள இயற்கையான அமிலத்தன்மை நமது உச்சந்தலையின் பிஹெச் அளவை சீர் படுத்த உதவுகிறது. உச்சந்தலையில் பிஹெச் அளவு சமநிலையில் வரும் போது பொடுகு பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. தக்காளி சாற்றினை எடுத்து நேரடியாக உச்சந்தலையில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யலாம்.
இயற்கையான முறையில் இந்த பளபளப்பு தன்மையை பெறுவதற்கு நாம் இந்த தக்காளியை பயன்படுத்தலாம். தக்காளி சேர்க்கப்பட்ட கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் வெடித்த முடிகள் மறைந்து பளபளப்பை உங்களால் பெற முடியும். இயற்கையான கண்டிஷனராக தக்காளி பயன்படுகிறது.
வெளிப்புறமாக மட்டுமல்லாமல் உணவிலும் நீங்கள் அதிக அளவில் தக்காளி சேர்த்துக் கொள்ளும் போது அது உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தையும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
தக்காளியில் நமது கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் பல நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால் இவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகின்றன.